17ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது என இன்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த பின்னால் மற்ற போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும்.
மார்ச் 22 ஆம் தேதி 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத இருக்கிறது.
இந்த வருட ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள இருக்கிறார்கள் என்பது, ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தி இருக்கிறது. மேலும் அட்டவணை அறிவித்த நிமிடத்தில் இருந்து ஐபிஎல் காய்ச்சல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.
மகேந்திர சிங் தோனி எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் வந்து விளையாடக்கூடிய வீரராக இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு இருந்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் வரிசையில் மிகவும் கீழே வந்தார். மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 106 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். ஆனால் அவருடைய பேட் வீச்சு மற்றும் பந்தை கனெக்ட் செய்வதற்கான நேரம் மிக நன்றாகவே இருந்தது. ஆனாலும் உள்நாட்டில் எந்த வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் பெரிய அளவிலான ஐபிஎல் தொடருக்கு மகேந்திர சிங் தோனி வருவது இன்றைய நாளிலேயே விவாதம் ஆகி இருக்கிறது.
மகேந்திர சிங் தோனி குறித்து பேசி உள்ள பார்த்திவ் படேல் “பத்து மாதங்களுக்கு ஒரு முறை மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட் விளையாட வருகின்ற பொழுதெல்லாம், அவருக்கு இதுவே கடைசி ஐபிஎல் சீசன் என்று எல்லோரும் பேசி முடிக்கிறோம். ஆனால் இதற்கு உண்மையான பதிலை அவர் மட்டுமே கொடுக்க முடியும்.
இதையும் படிங்க : “ரஜத் பட்டிதார் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?” – இந்தியா பேட்டிங் கோச் வெளிப்படை பேச்சு
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில் எதுவும் விளையாடாமல், ஐபிஎல் தொடருக்கு வந்து விளையாடும் பொழுது தடுமாறிய வீரர்களை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஹைடன் மற்றும் கில்கிரிஸ்ட் ஆகியோருக்கு இந்த பிரச்சனை இருந்தது. எனவே இது அவருடைய பேட்டிங்க்கு சவாலாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.