கிரிக்கெட்டைப் பொருத்தவரை இந்த ஆண்டு உலக கிரிக்கெட் நாடுகளில் விளையாடும் வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் 2024ம் ஆண்டுக்கான சிறந்த பேட்ஸ்மேனைத் தேர்வு செய்து அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
2024ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் டெஸ்டில் தங்களது சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோர் இந்த ஆண்டு தங்களது சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதில் குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெயஸ்வால் இந்த ஆண்டு அவருக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போதும் சரி, சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போதும் சரி, அதேபோல தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் விளையாடும் போதும் தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்த நிலையில் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரராக ஜெய்ஸ்வாலை பார்த்திவ் பட்டேல் தேர்வு செய்திருக்கிறார்.
அதற்கான காரணம் அவர் கூறும் போது “நிறைய கிரிக்கெட் வீரர்கள் ஒரே மாதிரியான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்கிறார்கள். ஆனால் எனது கருத்தின்படி இந்த ஆண்டின் சிறந்த வீரர் சிறந்த பேட்ஸ்மேன் எனக் கூறினால் நான் ஜெய்ஸ்வாலின் பெயரை குறிப்பிடுவேன். ஏனென்றால் அவர் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்துள்ளார். அவர் ஒரே முறையில் ஒரே மாதிரியாக பேட்டிங் செய்வதில்லை. உதாரணமாக ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கூறலாம்.
இதையும் படிங்க:சேவாக் மாதிரி.. ஜெய்ஸ்வால் இந்த டெக்னிக் யூஸ் பண்ணி ஆடணும்.. அவர் நினைச்சது நடக்கும் -இந்திய வீரர் பேட்டி
அங்கு அவர் ஆண்டர்சனின் பந்துவீச்சில் அடித்து விளையாடவில்லை. ஆண்டர்சன் சிறப்பாக வீசும் போது அதனை தடுத்து ஆடிய நிலையில் அதற்குப் பிறகு பெரிய ஷாட்களுக்குச் சென்று இரட்டை சதம் அடித்தார். அதேபோல சுழல் பந்து வீச்சு வரும்போது அதற்குத் தகுந்தவாறு விளையாடுகிறார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வித்தியாசமான ஸ்ட்ரைக் ரேட் உடன் விளையாடினார். அதிரடியாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். இதில் நான் ஐபிஎல் தொடரில் விளையாடியதை வைத்து கணக்கிடவில்லை. வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடியதை வைத்து மதிப்பிட்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.