இதுதான் வெற்றிக்கான வழி ; இந்த வீரரை இங்கே அனுப்புங்கள் – பார்த்திவ் படேல் அறிவுரை!

0
110
Parthiv patel

இந்திய அணி சில காரணங்களால் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்து வெளியேறி இருக்கிறது. ஆனாலும் இந்த தோல்வியை தாண்டி அந்த தொடரில் ஒரு விஷயம் இந்திய அணியையும் நிர்வாகத்தையும் பெரிய மகிழ்ச்சிக்கு கொண்டு வந்திருக்கிறது.

அதுதான் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம். ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு கடைசி போட்டி ஆப்கானிஸ்தானுடன் நடந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 61 பந்துகளுக்கு 122 ரன்களை 200 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது சதத்தையும், டி20 போட்டியில் முதல் சதத்தையும் கொண்டுவந்தார். அவர் திரும்பவும் பழைய நிலைக்கு பேட்டிங்கில் வந்திருப்பது இந்திய அணியை மிகவும் பலமாக்கும். இது சக வீரர்களையும் அணி நிர்வாகத்தையும் மகிழ்ச்சி படுத்தியிருக்கிறது.

- Advertisement -

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் ஃபார்ம் பெரிய சிக்கலை உருவாக்குகிறது, அதேசமயத்தில் ரவீந்திர ஜடேஜா காயம் அடைந்ததும் சிக்கலை பெரிதாக்குகிறது. இதனால் ஆடும் அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலை உருவாகிறது. மேலும் ரிஷப் பண்ட்டை ஆடும் அணியில் வைத்தால் அவர் கொஞ்சம் முன்னே விளையாட வேண்டும். அதேசமயத்தில் சூரியகுமார் நம்பர் நான்கில் வரவேண்டும். இந்திய அணியில் தற்போது இந்த பிரச்சனை நிலவுகிறது.

இதற்கெல்லாம் தீர்வாக, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். அவர் விராட் கோலி பேட்டிங்கில் துவக்க வீரராக வர வேண்டும் என்று விரும்புகிறார். இதன் மூலம் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது உண்மைதான்.

பார்த்திவ் படேல் கூறும்பொழுது ” இது மிகவும் தெளிவாக உள்ளது. ஆசிய கோப்பையில் விராட்கோலி துவக்க வீரராகக் களம் இறங்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதேபோல் அவர் உலக கோப்பை போட்டிகளிலும் துவக்க வீரராகக் களமிறங்க வேண்டும. இதுவே சரியான சமநிலையை அளிக்கிறது ” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் இதை விளக்கிப் பேசிய அவர் “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இரண்டு விதமான வீரர்கள். ஒருவர் ஆரம்பத்தில் இருந்தே அடித்து விளையாடுவார். இன்னொருவர் விராட் கோலி ஃபீல்டர்களிடம் உள்ள இடைவெளியில் பவுண்டரி தேடுவார். இவர்கள் இருவரும் முதல் 6 ஓவர்கள் விளையாடினால், ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலும் 50 ரன்கள் வரும். விக்கெட்டை இழக்காமல் இது மிகவும் நல்ல ஸ்கோர். உங்களின் சிறந்த இரண்டு பேட்டர்கள் முதல் 6 ஓவர்களில் விக்கெட்டை இழக்காமல் விளையாடுகிறார்கள், உங்கள் கைவசம் விக்கெட்டுகள் இருக்கிறது, இதுவே எந்த ஒரு டி20 அணிக்கும் வெற்றிக்கான செய்முறையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்!