காயம் காரணமாக விலகினாரா பாண்டியா”? – துணைகேப்டன் ரஷித் கான் தந்த விளக்கம!

0
136

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டிகளில் 13 வது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

இந்தப் போட்டி தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வெற்றி பெற்ற குஜராத் அணிய புள்ளிகள் பட்டியலில் முதல் முதலிடம் வகித்து வந்தது . ஆனால் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் பெற்ற மிகப்பெரிய வெற்றியால் குஜராத் அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது எனினும் அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் முதலிடத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்யும் .

- Advertisement -

கொல்கத்தா அணியை பொறுத்தவரை தங்களது முதல் போட்டியில் பஞ்சாப் அணி உடன் தோல்வி அடைந்தாலும் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தங்களது புள்ளி கணக்கை துவங்கியது. மேலும் இந்த போட்டிகளிலும் வெற்றி பெற்று அந்த அணியை தனது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .

டாஸ் வென்ற குஜராத்த அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. இன்று அந்த அணிக்கு கேப்டனாக ரஷீத்க்கு அனுப்பு பதவியேற்று இருக்கிறார். இதன் மூலம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என்பது உறுதியாக இருக்கிறது. இதுநாள் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக அபிநவ் மனோகரன் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் .

ஹர்திக் பாண்டியா ஏன் விளையாடவில்லை என குஜராத் அணியின் கேப்டன் ரஷித் கான் இடம் கேட்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரஷித் கான் ” அவர் உடல் நலம் சரியில்லாததால் இன்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. அணி நிர்வாகம் அவரை இந்த போட்டியில் பங்கேற்க வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை . இன்னும் நிறைய போட்டிகள் நாங்கள் ஆட வேண்டியுள்ளது அதனால் இந்தப் போட்டியில் அவர் ஆடவில்லை என தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசுகையில் ரசித்தான். எந்த ஒரு பிரச்சனையையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த வருடத்தின் நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வருடமும் தனது கணக்கை மிகச் சிறப்பாக துவக்கியுள்ளது . சென்னை அணியுடன் ஐந்து விக்கெட்டுகள் வித்யாசத்தில் வெற்றி டெல்லி அணியுடன் வெற்றி என ஆரம்பமே விமர்சையாக தொடங்கி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா அந்த அணியில் விளையாடுவது அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்தாலும் . மில்லர் திவாட்டியா போன்ற சிறப்பான வீரர்கள் இருப்பதால் இன்றும் குஜராத் அணியை வெற்றி பெறும் என பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் .

ஆனால் சென்ற போட்டிகளில் எதிர்பார்க்காத அளவு திருப்புமுனைகளின் மூலம் பெங்களூர் அணியை தோற்கடித்தது கொல்கத்தா . அந்த அணியின் சுழல் பந்து வரிசை பலமாக உள்ளது . மேலும் பேட்டிங்கில் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அபாயகரமானவர்களாக இருக்கின்றனர். பெங்களூர் அணியுடன் 89 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் சர்துல் தாக்கூர் மற்றும் ரிக்வெஸ்டிங் இணைந்து அடுத்த ஒன்பது ஓவர்களில் 100க்கும் மேற்பட்ட கண்களை சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . எனவே கொல்கத்தா அணியையும் குறைவாக மதிப்பிட முடியாது என்பதால் இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .