PAKvsNZ.. சிஎஸ்கே வீரர் அதிரடியில் பாகிஸ்தான் 4வது தோல்வி.. ரிஸ்வானின் போராட்டம் வீண்

0
317
Rizwan

நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இதுவரையில் நடைபெற்று இருந்த மூன்று போட்டிகளையும் வென்று நியூசிலாந்து ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் நான்காவது போட்டி தற்பொழுது நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் 19, முகமது நவாஸ் 21 என குறிப்பிடும்படி இருவர் மட்டுமே சுமாரான ரன்கள் எடுத்து கொடுத்தார்கள்.

துவக்க வீரராக வந்த முகமது ரிஸ்வான் தனி ஆளாக போராடி பாகிஸ்தான் அணியை மீட்டார். மொத்தம் 63 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 90 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இவரின் பேட்டிங் போராட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் லாக்கி பெருக்கூஷன் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த நியூஸிலாந்து வேலைக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் ஷாகின் அப்ரிடி இரட்டை செக் வைத்து பின் ஆலன் மற்றும் டிம் செய்பர்டை வெளியேற்றினார். மேலும் மூன்றாவது விக்கட்டாக வில் யங் விக்கட்டையும் கைப்பற்றினார். நியூசிலாந்தின் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட டேரில் மிட்சல் மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.

முதலில் பொறுமை காட்டிய இந்த ஜோடி போகப்போக அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் நியூசிலாந்து அணியின் பக்கம் வந்தது. இறுதி வரை நிலைத்து நின்ற இந்த ஜோடி 18.1 ஓவரில் இலக்கை எட்டி நியூசிலாந்து அணியை நான்காவது வெற்றி பெற வைத்தது.

இந்த ஜோடி மொத்தம் 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டேரில் மிட்சல் 44 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 72 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 52 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார்கள்.