PAKvsBAN.. ஷாகின் அப்ரிடி அதிரடி மாஸ் உலக சாதனை.. 10 பந்தில் ஸ்டார்க் ரெக்கார்ட் காலி!

0
2415
Shaheen

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியில் மெகதி ஹசன் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் தவ்ஹீத் ஹ்ரிடாய் கொண்டுவரப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான அணியில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இமாம், நவாஸ், சதாப் வெளியே அனுப்பப்பட்டு, பகார் ஜமான், சல்மான், உசாமா ஆகியோர் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் எட்டாம் இடம் வரை மிகவும் வலிமையானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் வெல்வது என்பது இரு அணிகளுக்குமே அரையிறுதிக்கான வாய்ப்பு என்பது இல்லாமல், கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக்கோப்பைக்கு வந்ததற்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கும் என்கின்ற நிலைதான் இருக்கிறது.

- Advertisement -

இன்று முதல் ஓவரை வீசிய ஷாகின் அப்ரிடி அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ரன் ஏதும் இல்லாமல் தன்ஷித் ஹசனை வெளியேற்றினார். மீண்டும் அவருடைய இரண்டாவது ஓவருக்கு வந்து, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நஜீபுல் சாந்தோவை மூன்று ரன்களில் வெளியேற்றினார். மொத்தம் பத்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள் அவருக்கு கிடைத்தது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 51 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை ஷாகின் அப்ரிடி படைத்திருக்கிறார். இந்த வரிசையில் இதற்கு முன்பாக 52 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட் கைப்பற்றி ஸ்டார்க் முதல் இடத்தில் இருந்தார்.

ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் நேபாளத்தைச் சேர்ந்த லமிக்சானே 42 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 44 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட் கைப்பற்றி இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

- Advertisement -