PAKvNZ.. வெறும் 92 ரன்.. 17 ஓவர்.. 6பேர் ஒற்றை இலக்கம்.. டி20 தொடரில் கடைசியில் கிடைத்த முடிவு

0
223
Pakistan

ஷாகின் ஷா அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற நான்கு போட்டிகளையும் தொடர்ந்து தோற்று பாகிஸ்தான் தொடரை இழந்திருந்தது. இதன் காரணமாக வெளியில் மீண்டும் பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்கள் அதிகரித்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த முறை டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

வழக்கம்போல் இந்த முறையும் பாகிஸ்தான் அணியில் இருந்து பெரிய ரன் பங்களிப்புகள் வரவில்லை. முகமது ரிஸ்வான் 33, பகார் ஜமான் 33, பர்கான் 19, அப்பாஸ் அப்ரிடி 14, பாபர் அசாம் 13 என ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. டிம் சவுதி, இஸ் ஷோதி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன் நால்வரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து சிறிய இலக்கை நோக்கி விளையாடி வொயிட் வாஷ் செய்ய களம் இறங்கிய நியூசிலாந்து அணி சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் பின் ஆலன் 22, டிம் செய்ப்பர்ட் 19, கிளன் பிலிப்ஸ் 26 என சொற்ப ரன்களே எடுத்தார்கள். அந்த அணியின் ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

இதனால் நியூசிலாந்த அணி 17.2 ஓவரில் 92 ரன்களுக்கு சுருண்டு 42 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷாகின் அப்ரிடி, முகமத் நவாஸ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்ற, பகுதி நேர பந்துவீச்சாளர் இப்திகார் அகமது மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கடைசியில் ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது. முதல் நான்கு போட்டிகளை தோற்ற அந்த அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்திருக்கிறது. மேலும் புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடிக்கு முதல் வெற்றியாகவும் இது அமைந்திருக்கிறது.