என் பவுலிங்கை பார்த்து இந்தியா பயப்படுது.. நாங்க தான் அவங்க கிட்ட நிறைய சாதனை பண்ணி இருக்கோம் – உஸ்மான் தாரிக் பேச்சு

0
6
Usman

பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் இந்தியர்கள் மிகவும் அழுத்தத்தில் இருக்கின்ற காரணத்தினால்தான் தன் பந்துவீச்சு குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் செய்து வருகிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

உஸ்மான் தாரிக் பந்துவீச்சு சந்தேகத்தை கிளப்பக்கூடிய வகையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் போது ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீன் அவர் பந்தை எறிவதாக சிக்னல் மூலம் குற்றச்சாட்டை வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியர்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள்

இதுகுறித்து பேசி உள்ள உஸ்மான் தாரிக் கூறும் பொழுது ” இந்தியர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் என் பந்துவீச்சு குறித்து அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் விவாதங்களை பார்க்கும் பொழுது அவர்கள் அழுத்தத்தில் இருப்பதாக தான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ஊடகங்களில் என்ன நடக்கிறது என்று நான் கண்டு கொள்வதில்லை. நான் என்னுடைய பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன்”

“தற்போது இந்திய இந்திய அணி எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருவதாக சாதனைகளை சொல்கிறார்கள். ஆனால் முதலில் இந்த சாதனைகளை நாம் எப்போது தோற்க ஆரம்பித்தோம் என்பதிலிருந்து வைத்து பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது நாங்கள் இந்திய அணிக்கு எதிராக ஆரம்பத்தில் மிகச் சிறப்பான சாதனைகளை செய்திருக்கிறோம் என்பது தெரிய வரும்”

- Advertisement -

இது எனக்கு சாதாரணம் போட்டி

“அடுத்து இந்திய அணிக்கு எதிராக வரவிருக்கும் போட்டியை பற்றி சொன்னால் நாங்கள் எல்லோருமே எங்களுடைய பயிற்சியில் மட்டும்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுத்தால் மட்டும்தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்று தெரியும். இதை வென்று எல்லோருக்கும் மறக்க முடியாத ஒன்றாக நாங்கள் மாற்ற வேண்டும்”

இதையும் படிங்க: எங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு வீணாகிவிட்டது.. ஐபிஎல் அனுபவம் இருந்தும் தோற்றோம் – ரஷித் கான் வருத்தம்

“எனக்கும் அணிக்கும் இது ஒரு சாதாரண போட்டிதான். தேவையில்லாத ஹைப்பை வைத்துக் கொண்டால் நம்முடைய செயல்பாட்டை அது பாதித்துவிடும். விஷயங்களை எளிமையாக வைத்திருக்க முடியாது. எனவே விஷயங்களை எளிமையாக வைத்துக் கொண்டு நம்முடைய திட்டத்திற்கு வேலை செய்து போட்டியை வெல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -