எங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு வீணாகிவிட்டது.. ஐபிஎல் அனுபவம் இருந்தும் தோற்றோம் – ரஷித் கான் வருத்தம்

0
2
Rashid

இன்று டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள் இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு சென்றோம் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து மிகவும் வருத்தத்துடன் ரஷீத் கான் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் வென்றால் டி20 உலக கோப்பையில் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தொடர முடியும், தோல்வியடைந்தால் 99% வெளியேற வேண்டும் என்கின்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டு சூப்பர் ஓவர்

இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 187 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் 187 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டை ஆகி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 17 ரன்கள் எடுக்க இரண்டாவது சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.

இந்த சூப்பர் ஓவரில் 23 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணி எடுக்க, முதல் இரண்டு பந்துகள் வீணான நிலையில் கடைசி மூன்று பந்துகளில் ஆட்ரிக் சிக்ஸர் அடித்து குர்பாஸ் கலக்கினார். இறுதிப் பந்தில் ஒரு சிக்சர் தேவைப்பட்ட நிலையில் அவர் ஆட்டம் இழக்க ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஒன்றரை வருட உழைப்பு வீணாகிவிட்டது

இந்த போட்டி குறித்து ரஷித் கான் பேசும் பொழுது ” எங்கள் வீரர்களின் போராட்டம் மிகுந்த பெருமையை எனக்கு கொடுக்கிறது. இந்த மைதானத்தில் நாங்கள் நிறைய ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவப்பட்டு இருக்கிறோம். தென் ஆப்பிரிக்கா சிறப்பாக தொடங்கிய போதிலும் அவர்களை 187 ரன்னில் கட்டுப்படுத்தியது சிறந்த விஷயம். பந்துவீச்சில் முதல் 10 ஓவர்கள் முடிந்ததும் நாங்கள் இதைத்தான் பேசி வைத்திருந்தோம்”

இதையும் படிங்க : டி20 உகோ வரலாற்றில் முதல் முறை.. பெஸ்ட் மேட்ச் இதுதான்.. ஆப்கான் போராடி தோல்வி.. தென் ஆப்பிரிக்கா வெற்றி

“குர்பாஸ் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடுவதற்குதான் பெயர் பெற்றவர் அவர் சிறப்பாக செய்தார். கடந்த ஒன்றரை வருடமாக நாங்கள் இந்த உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு கடுமையாக உழைத்திருக்கிறோம். தற்போது அது முடியாமல் போயிருக்கிறது. இது பெரிய ஏமாற்றம். தேசத்தை உலகளவில் முதன்மைப்படுத்துவது எப்போதும் பெருமைக்குரியது. அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -