இந்தியா ஆஸ்திரேலியா விட.. இங்கிலாந்து கிரிக்கெட் இந்த விஷயத்துல பெஸ்ட்டா இருக்கு – பாக் டெஸ்ட் கேப்டன் பேட்டி

0
420

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பாணி குறித்து பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனான ஷான் மசூத் சில முக்கிய கருத்துக்கள் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், பிரன்டன் மெக்கல்லம் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்ற பிறகு அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் விதம் முற்றிலுமாக மாறியது. டி20 கிரிக்கெட் விளையாடும் பானியை போன்றே இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகியது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புதிய அணுகுமுறையை வழி வகுத்து கொடுத்தது.

2022ஆம் ஆண்டு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த போது முதல் நாளில் அதிரடியாக விளையாடி 506 ரன்கள் குவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. எனவே தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர் விளையாடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டி சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் விதம் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் எப்போதும் எங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். மேலும் முடிவைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த கிரிக்கெட்டை எதிரணிக்கு எடுத்துச் செல்லும் போது உற்சாகமாக இருக்கிறோம். இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை ஆக்ரோஷமான முறையில் அதிரடியாக விளையாடி வருகிறது.

ஒரு விஷயத்தை செயல்படுத்த புதிய வழிகளை கண்டுபிடிப்பது என்பது எப்போதும் முக்கியமானது. கிரிக்கெட் என்று இல்லாமல் உலகம் இதை பின்பற்றிதான் முன்னேறி வருகிறது. முயற்சிகளை செய்து புதிய வழிகளை உருவாக்குவதில் இங்கிலாந்து கிரிக்கெட் முன்னோடியாக திகழ்கிறது என்று பாராட்டி பேசி இருக்கிறார். அதாவது கிரிக்கெட்டில் வல்லரசு நாடுகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை விட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற வகையில் பேசி இருக்கிறார். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க:6 ஃபோர்ஸ் 1 சிக்ஸ்.. சேவாக் மகன் அறிமுகம்.. டெல்லி அணிக்காக அசத்தல் பேட்டிங்.. யு19 கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் இழந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றி அவசியமான ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே சொந்த மண்ணில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற பாகிஸ்தான் அணி முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -