பாகிஸ்தானுக்கு இருக்கும் அரையிறுதி வாய்ப்பு.. கிரிக்கெட் கால்குலேட்டர் என்ன சொல்கிறது?.. முழு விபரங்கள்!

0
2245
Babar

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வாய்ப்புக்கு கால்குலேட்டரை கையில் எடுக்கும் நேரம் வந்திருக்கிறது.

இந்திய அணி அரையிறுதி வாய்ப்புக்கு யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. இனி வரக்கூடிய தனது 4 போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலும் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட முடியும்.

- Advertisement -

இதேபோல் தென் ஆப்பிரிக்க அணி ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்று 10 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. எனவே மேற்கொண்டு எந்த அணி ஒரு ஆட்டத்தை வென்றாலும் அரைஇறுதிக்குள் சென்று விடும்.

தற்பொழுது ஏறக்குறைய 99 சதவீதம் அரை இறுதி வாய்ப்பை இழந்த பெரிய அணிகளாக இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான அணிகள் நடப்பு உலகக் கோப்பையில் இருக்கின்றன. அதே சமயத்தில் இந்த இரண்டு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்புகள் ஒரு சதவீதத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு என்பது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளின் வெற்றி தோல்வியில் அமைந்திருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு வர வேண்டும் என்றால், ஆஸ்திரேலியா அணி இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை வெல்ல வேண்டும். அதே சமயத்தில் நியூசிலாந்து அணி தனக்கு இருக்கும் மற்ற ஆட்டங்களில் தோற்க வேண்டும்.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா நியூசிலாந்தை மட்டும் வென்று மிச்சம் இருக்கும் எல்லா போட்டிகளையும் தோற்க வேண்டும். இல்லை குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளையாவது தோற்க வேண்டும்.

அடுத்து பாகிஸ்தான் அணி தனக்கு இருக்கின்ற மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். இப்படி நடக்கும் பொழுது நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 8 புள்ளிகள் உடன் இருக்கும். பாகிஸ்தான் அணி 10 புள்ளிகள் எடுத்து இருக்கும்.

மேலும் ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளில் 2 வென்றால் ஆஸ்திரேலியா அணியும் 10 புள்ளிகள் எடுத்து இருக்கும். கூடவே பாகிஸ்தான் அணி தனது மூன்று ஆட்டங்களையும் வென்று 10 புள்ளிகள் எடுத்து இருக்கும், நியூசிலாந்து 8 புள்ளிகள் உடன்தான் இருக்கும். இந்த வகையில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இப்படியான சில அதிர்ஷ்டங்கள் கை கொடுக்கவே அதற்குப் பிறகு நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் உலகக் கோப்பையை கைப்பற்றியது. மீண்டும் அப்படி ஏதாவது அதிசயங்கள் நடக்குமா என்று பார்ப்போம்!