“பாகிஸ்தான் வீரர்கள் பந்தை அதிகமா சேதப்படுத்துவாங்க” – சர்ச்சையை கிளப்பிய பிரவீன் குமார்!

0
64
Praveen

இந்திய கிரிக்கெட்டில் ஸ்விங் வேகப்பந்து வீச்சில் ஆரம்பத்தில் கபில்தேவ் அபாரமான செயல்பாட்டை கொண்டிருந்தவராக இருந்தார். மேலும் அவர் ஆல் ரவுண்டராக இருந்தும், கேப்டனாகவும் இருந்து உலகக் கோப்பையை வென்ற காரணத்தினால், இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு என ஒரு தனி இடம் இருக்கிறது.

இதற்கடுத்து ஸ்விங் வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமாருக்கு முன்பாக மிகவும் திறமையான புகழ்பெற்ற பந்துவீச்சாளராக பிரவீன் குமார் இருந்தார்.

- Advertisement -

அவர் புதிய பந்தை அசாதாரணமாக இரண்டு பக்கங்களிலும் திருப்பக்கூடிய திறனை பெற்று இருந்தார். இதன் காரணமாக அவரால் புதிய பந்தில் எந்த ஒரு நாட்டிலும் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேன்களையும் வீழ்த்த முடிந்தது.

இதன் காரணமாக ஆரம்பத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சில் முக்கிய துருப்பு சீட்டாக மாறினார். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய விக்கட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

ஆனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை திடீரென யாருக்கும் புரியாத அளவுக்கு சீர்குலைந்து, பொதுச் சமூகத்திற்கு அவர் வராமல் முடங்கி போனார். சமீபத்தில் தான் தற்கொலை எண்ணங்களில் இருந்து தப்பி வந்ததாக பேசி இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது வெளியில் வந்து பேச ஆரம்பித்திருக்கும் பிரவீன்குமார் மனம் திறந்து நிறைய விஷயங்களை பேசி வருகிறார். அதில் ஒட்டுமொத்தமாக அணியினரிடம் இருந்த குடிப்பழக்கம் வரை பேசியிருக்கிறார். மேலும் அவர் விளையாடிய காலத்தில் பந்தை சேதப்படுத்துவதை எல்லோரும் பழக்கமாக வைத்திருந்தார்கள் என்கின்ற பகிர் தகவலை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பிரவீன் குமார் கூறும் பொழுது ” எல்லோரும் ரிவர்ஸ் ஸ்விங் பெறுவதற்காக பந்தை கொஞ்சம் சேதப்படுத்த செய்கிறார்கள். ஆனால் இதை பாகிஸ்தான் தரப்பில் அதிகம் செய்வார்கள். இப்போது எல்லா இடங்களிலும் கேமராக்கள் இருக்கிறது.

ஆனால் முன்பு அப்படி கிடையாது. இதனால் பந்தை ஒரு புறமாக நிறைய கீறி வைத்து விடுவார்கள். ஆனாலும் கூட தந்தை என்ன செய்தாலும் அதை பயன்படுத்துவதற்கு ஒரு பந்துவீச்சாளருக்கு திறமை வேண்டும்.

நான் பந்தை கீறி ஒருவரிடம் கொடுத்தால், அவருக்கு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் கலை தெரிந்திருக்க வேண்டும். அதை ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!