கேலி செய்த பாகிஸ்தான் ரசிகர்கள்.. 14 வயது சூரியவன்சி செய்த காரியம்.. சிறுவனிடம் கூடவா இப்படி – என்ன நடந்தது?

0
13
Suryavanshi

இந்திய அண்டர் 19 அணியின் 14 வயதான வைபவ் சூரியவன்சியை பாகிஸ்தான் ரசிகர்கள் கூச்சலிட்டு கேலி செய்த சம்பவம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு மைதானத்தை விட்டு வெளியே வந்த வைபவ் சூர்யவன்சியிடம் பாகிஸ்தான் ரசிகர்கள் சிறுவன் என்றும் பார்க்காமல் நடந்து கொண்ட விதம் இந்திய ரசிகர்களுக்கு கோபத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

என்ன காரணம்?

சில நாட்களுக்கு முன்பு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் இந்திய அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 348 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் 156 ரன்னில் ஆட்டம் இழந்தது.

இந்த இறுதிப் போட்டியில் மெகா வெற்றி பெற்ற பாகிஸ்தான் அண்டர் 19 அணி ஆசியக் கோப்பை தொடரை வென்றது. இந்திய அணியை வெல்ல முடியாமல் பல காலமாக இருந்து வருகின்ற காரணத்தினால், அவர்களுக்கு இந்த வெற்றி மிகப் பெரியதாக இருந்தது. இதனால் அவர்களுடைய கொண்டாட்டமும் பெரிய அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சூரியவன்சி செய்த சம்பவம்

இந்த நிலையில் வைபவ் சூரியவன்சி இறுதிப்போட்டி முடிந்து மைதானத்தை விட்டு வெளியில் வரும் பொழுது, அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் சிறுவன் என்றும் பார்க்காமல் கத்திக் கூச்சலிட்டு அவரை கேலி செய்தார்கள். அவர் வெளியில் வருவதை பார்த்ததும் பாகிஸ்தான் ரசிகர்கள் இதை ஆரம்பித்து விட்டார்கள்.

இதையும் படிங்க: 2026 டி20 உலக கோப்பை.. மிரட்டலான 4 இந்திய பிளேயிங் XI.. அகர்கரின் மாஸ் மூவ்.. அசுர பல அணி

வைபவ் சூரியவன்சி சிறுவனாக இருந்தாலும் கூட பாகிஸ்தான் ரசிகர்களின் கூச்சல் கேலியை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், அவர்கள் அங்கு இருப்பதையே பார்க்காமல், உடன் வந்தவருடன் மிகச் சாதாரணமாக பேசிக்கொண்டு கடந்து சென்றுவிட்டார். இந்த சிறுவயதில் இப்படிப்பட்ட கூச்சல் கேலிகளுக்கு அவர் அமைதியான முறையில் பதில் அளித்த விதம் பலரும் பாராட்டும்படியாக அமைந்திருக்கிறது.

- Advertisement -