2026 டி20 உலக கோப்பை.. மிரட்டலான 4 இந்திய பிளேயிங் XI.. அகர்கரின் மாஸ் மூவ்.. அசுர பல அணி

0
138
Agarkar

அடுத்த ஆண்டு 2026 பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் எந்த மாதிரியான இந்திய பிளேயிங் லெவன்கள் அமையலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

தற்போது டி20 உலக கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து துணை கேப்டன் கில் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது இந்திய அணி நிர்வாகம் நிறைய காம்பினேஷங்களை உருவாக்கும் வசதி ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

முக்கிய பிளேயிங் லெவன்

இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் பெரும்பாலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே முதல் பிளேயிங் லெவன் அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வகையில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா என முதல் பிளேயிங் லெவன் அமைக்கப்படலாம். இதில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இருப்பார்கள். மேலும் எட்டு வரையில் அதிரடியான பேட்டிங் வரிசையும், அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா உடன் மொத்தம் எட்டு பந்து வீச்சு விருப்பங்கள் இருக்கும்.

- Advertisement -

இரண்டாவது பிளேயிங் லெவன்

இதற்கு அடுத்து இரவில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்றால், சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு, அவருடைய இடத்திற்கு அர்ஸ்தீப் கொண்டு வரப்படுவார். இந்திய அணி நிர்வாகத்தின் திட்டத்தில் இரண்டாவது பிளேயிங் லெவனாக இருக்கும்.

இதையும் படிங்க : ஆஷஸ் தொடர்னால இப்போ இங்கிலாந்து டீமுக்கு.. பெரிய அசிங்கம் ஆயிடுச்சு.. தோல்வி இதனாலதான்னு புரிஞ்சுக்கல – அஸ்வின் ஆதங்கம்

மேலும் எதிரணியில் அதிக இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்தால் அவர்களுக்கு பந்தை வெளியில் திருப்புவதற்கு, அக்சர் படேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வரலாம். இது மூன்றாவது பிளேயிங் லெவனாக இருக்கும். மேலும் சுழல் பந்துவீச்சுக்கு நல்ல சாதகம் இருக்கும் பொழுது சிவம் துபே இடத்தில் வாஷிங்டன் சுந்தரை கொண்டு வரலாம். இது நான்காவது பிளேயிங் லெவனாக இருக்கும். எப்படி என்றாலும் 8 வரையில் பேட்டிங் உறுதி என்பதும், பினிஷராக அனுபவம் உள்ள ரிங்கு சிங் இருப்பதும் பவுலிங் யூனிட் போலவே பேட்டிங் யூனிட்டையும் பலமானதாக மாற்றுகிறது!

- Advertisement -