ப்ளீஸ் என்னை யாரும் அப்படி சொல்லாதீங்க.. நான் அப்படிப்பட்ட பிளேயர் இல்ல – பாபர் அசாம் வேண்டுகோள்

0
206
Babar

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களிடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

தற்போது பாகிஸ்தானில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று இருக்கின்றன. இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணி வெளியேறியது.

- Advertisement -

சரிந்த பாபர் அசாம் பேட்டிங் ஃபார்ம்

கடந்த இரண்டு வருடங்களாக பாபர் அசாம் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சரிவை கண்டு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் பாபர் அசாமை அடுத்த கிங் என விராட் கோலி உடன் ஒப்பிட்டு பேசி வந்தார்கள். விராட் கோலியின் பாபர் அசாம் அதற்கு தகுதியான வீரர் என அவருக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்து இருந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனைகளை பாபர் அசாம் முறியடிக்கலாம் என்றும் பேசப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில் வெளிநாடுகளில் மட்டும் இல்லாமல் சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களிலும் மூன்று வடிவத்திலும் பாபர் அசாம் மிகவும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். தற்பொழுது ஒரு நாள் கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் துவக்க வீரராக உயர்த்தப்பட்டிருந்த பொழுதிலும் கூட அவரால் முத்தரப்பு தொடரின் இரண்டு போட்டிகளிலும் பெரிய ரன்கள் எதுவும் எடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்னை இப்படி அழைக்க வேண்டாம்

இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பாபர் அசாம் பேசும் பொழுது “தயவு செய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை. அந்த நிலைக்கான அருகிலும் நான் இல்லை. இப்போது நான் செய்வதற்கு புதிய ரோல் இருக்கிறது. அணிக்கு என்று ஒரு திட்டம் இருக்கிறது. நான் அதை கடைபிடித்து கொண்டு வருகிறேன். நேற்று ஆகா சல்மான் மற்றும் ரிஸ்வான் பேட்டிங் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது”

இதையும் படிங்க : அகர்கர் செஞ்ச வேலை சரியில்ல.. துபாய் பத்தி தெரியுமா?.. 2 வீரர்கள் தேவையில்ல – அஸ்வின் பேச்சு

“நான் இதற்கு முன்பு என்ன செய்து இருந்தாலும் அது கடந்த காலத்தில் செய்ததுதான். தற்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு போட்டியும் சவாலானது. எனவே நான் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது” என்று கூறிக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -