அகர்கர் செஞ்ச வேலை சரியில்ல.. துபாய் பத்தி தெரியுமா?.. 2 வீரர்கள் தேவையில்ல – அஸ்வின் பேச்சு

0
689
Ashwin

தற்போது சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் 5 சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது மிகவும் அதிகம் எனவும் துபாய் மைதானத்தில் பந்து அதிகம் திரும்பாது எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக நேரடியாக இந்திய அணி தேர்வு குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது சாம்பியன்ஸ் ட்ராபிக்கை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மொத்தம் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அதே சமயத்தில் தொடரை நடத்தும் பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரே ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளர் மட்டுமே அந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனக்கு இது புரியவில்லை

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “துபாயில் விளையாடுவதற்கு எதற்கு இத்தனை சுழல் பந்துவீச்சாளர்களை அழைத்து செல்கிறோம்? என்பது குறித்து எனக்கு புரியவில்லை. நாங்கள் ஐந்து சுழல் பந்துவீச்சாளர்களுடன் செல்கிறோம் அதே வேளையில் ஜெய்ஸ்வாலை அணியில் இருந்து நீக்கி இருக்கிறோம். மூன்று அல்லது நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை கூட்டி செல்வதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஐந்து என்கின்ற பொழுது அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”

” தற்போது இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் அணியில் அதிகமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தற்போதைய பிளேயிங் லெவனில் ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல் இருவரும் இடம் பெறுவார்கள். மேலும் குல்தீப் யாதவ் விளையாடுவார் என்பது உறுதியாக தெரிகிறது. அப்படி என்றால் வருண் சக்கரவர்த்தி விளையாடுவதற்கு நீங்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளரை இழக்க வேண்டியதாக இருக்கும்”

- Advertisement -

அணிதேர்வில் திருப்தி இல்லை

“குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படி என்றால் நீங்கள் வருணுக்கு எப்படி இடம் கொடுப்பீர்கள்? வருண் மிக நன்றாக வ
பந்து வீசுகிறாரா என்றால் ஆம் சிறப்பாக இருக்கிறார். நீங்கள் ஒரே அணியில் இருவரையும் வைப்பீர்கள் என்றால் அது சிறந்த முடிவாக இருக்கும் அதை செய்யுங்கள்”

இதையும் படிங்க : CT 2025: பயிற்சி போட்டிகள் அட்டவணை அறிவிப்பு.. இந்திய அணிக்கு ஒரு போட்டி கூட இல்லை.. காரணம் என்ன?

“இதில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நீங்கள் துபாயில் வந்து திரும்பும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நிச்சயமாக அங்கு சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சப்போர்ட் எதுவும் இருக்காது. நான் இந்த அணித்தேர்வில் இதை கொஞ்சம் சங்கடமாக உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -