உலக கிரிக்கெட்

207 ரன்.. பாகிஸ்தான் முதல் முறை சாதனை வெற்றி.. ஆஸி ஒயிட் வாஷ்.. உள்நாட்டில் சிறப்பான சம்பவம்

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்திருக்கிறது.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளை வென்று பாகிஸ்தான் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. மேலும் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சாதனை ரன் குவிப்பு

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரர் சையும் 37 பந்தில் 56 ரன்கள், பாபர் அசாம் 36 பந்தில் 50 ரன்கள், சதாப் கான் 19 பந்தில் 46 ரன்கள் அதிரடியாக எடுத்தார்கள். இதனால் 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது.

இதுவரையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாகிஸ்தான அணி ஒருமுறை கூட 200 ரன்கள் எடுத்ததில்லை. இன்று முதல் முறையாக பாகிஸ்தான அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 200 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா படுதோல்வி

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு கேமரூன் கிரீன் 24 பந்தில் 22 ரன்கள், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்கள். இவர்களைத் தவிர வேறு எந்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேனும் நின்று விளையாடவில்லை.

இதையும் படிங்க : அபிஷேக் போனா இஷான் வரார்.. உங்கள தடுக்க முடியலனு கைய தூக்கி ஒத்துக்கலாம் தப்பில்லை – சான்ட்னர் பேச்சு

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் எடுத்து சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி பரிதாபமாக ஒயிட் வாஷ் ஆகியது.

- Advertisement -
Published by

Recent Posts