நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்த இஷான் கிஷான் குறித்து நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் பேசியிருக்கிறார்.
தற்போது அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இஷான் கிஷான் டி20 உலகக் கோப்பையில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. அப்படி இவர்கள் இணைந்து வந்தால் அதிரடியான துவக்கம் இந்தியாவுக்கு அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இரண்டு இடதுகை வீரர்கள்
இதுவரையில் துவக்க இடத்திற்கு இரண்டு இடதுகை வீரர்கள் களம் இறங்கி விளையாடியதாக இந்திய கிரிக்கெட்டில் இல்லை. அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் களம் இறங்கும் பொழுது அது மிகவும் வித்தியாசமான ஒரு கூட்டணியாகவும் அதிரடியானதாகவும் அமையும்.
தற்போது இஷான் கிஷான் பேட்டிங் அபிஷேக் சர்மாவுக்கு இணையானதாக அதிரடியாக இருக்கிறது. நியூசிலாந்து டி20 தொடரில் அவர் சிறப்பாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தனி வீரராக அவரே போட்டியை வென்று கொடுத்துவிட்டார். அவர் ஆட்டம் எனக்கும் நிலையில் போட்டி இந்திய அணியின் கைகளுக்கு முழுவதுமாக வந்து விடுகிறது.
மிட்சல் சான்ட்னர் பாராட்டு
இதுகுறித்து பேசி உள்ள மிட்சல் சான்ட்னர் கூறும் பொழுது “இஷான் கிஷான் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தான் இடம்பெறுவதற்கு தகுதியானவர் என்று நிரூபித்திருக்கிறார். கடைசி 10 ஓவர்களில் அவர்கள் 170 ரன்கள் எடுத்தது இதற்கு சாட்சி. அதுபோல இரண்டு வீரர்கள் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவர்களை தடுப்பது கடினம். அந்த மாதிரியான நேரத்தில் நாமும் கையை உயர்த்தி சரி உங்களை எங்களால் தடுக்க முடியவில்லை என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்”
இதையும் படிங்க : சாம்சனின் இந்த நிலைமைக்கு காரணம் இந்த ரெண்டு பேர்தான்.. இதையும் நாம பேசணும் – இர்பான் பதான் பேச்சு
“அபிஷேக் ஷர்மாவும் சூரியகுமார் யாதவும் அதிரடியாக விளையாடுவதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தற்போது இஷான் கிஷான் அப்படி விளையாடுவதையும் பார்த்திருக்கிறோம். அவர்களுடைய பேட்மேன்கள் வெவ்வேறு கட்டத்தில் ரன்கள் எடுத்து வருகிறார்கள். இது இந்திய அணி சந்தோசப்பட வேண்டிய விஷயம்” என்று கூறியிருக்கிறார்.






