இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் எட்டு வருடங்கள் கழித்து அரை சதம் அடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் பாராட்டி பேசி இருக்கிறார்.
இரண்டு அணிகளுக்கும் இடையே ஆன தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று மழையின் நடுவே தொடங்கியது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளத்தில் புல் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வானிலை காணப்பட்டது. எனவே பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலை நிலவியது.
வெளியேறிய நட்சத்திரங்கள்
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 2, கேஎல்.ராகுல் 14, சாய் சுதர்சன் 38, கேப்டன் கில் 21, ரவீந்திர ஜடேஜா 9, ஜுரல் 19 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதன் காரணமாக இந்திய அணி கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியது.
இதைத்தொடர்ந்து ஒரு முனையில் நிலைத்து நின்று நேற்றைய நாளின் முடிவு வரையில் விளையாடிய கருண் நாயர் ஆட்டம் இழக்காமல் 98 பந்துகளில் 7 பவுண்டரிகள் உடன் 52 ரன்கள் எடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் எட்டு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பில் அவருக்கு வந்த முதல் அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சரியாக விளையாடாவிட்டால் அடுத்து அவர் இந்திய அணியில் நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி வாய்ப்பாக இருந்திருக்கும்
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது “கருண் நாயர் மிகவும் நன்றாக விளையாடினார். பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலையில் இது ஒரு உயர்தர அரைசதம் ஆகும். கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கை உண்மையில் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறது. ஒருவேளை அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்தால் கூட, அடுத்து அவரை இந்திய அணி தேர்வு செய்யாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ணனும்.? ஐபிஎல் ஆடுனாதான் டெஸ்ட் அணியில் வாய்ப்பா.? – கிரிக்கெட் வீரரின் தந்தை
கருண் நாயர் குறித்து வருண் ஆரோன் பேசும் பொழுது “அவருக்கு இது கடைசி வாய்ப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது ஆனால் கருண் நாயர் நிமிர்ந்து நின்றார். ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளுக்கு மென்மையான கைகளுடன் அவர் விளையாடியது தனித்து நின்றது” என்று பாராட்டியிருக்கிறார்.






