இந்திய மக்கள் எங்களுக்கு செஞ்ச மாதிரி.. ரோஹித் அணி பாகிஸ்தான் வரப்போ எங்க மக்களும் இதை செய்வாங்க – பாக் கேப்டன் பேட்டி

0
678

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெள்ளை பந்து கேப்டனாக விக்கெட் கீப்பர் முகமது ரஸ்வான் சமீபத்தில் பொறுப்பேற்று இருக்கிறார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் முகமது ரிஸ்வான் சாம்பியன் டிராபி தொடர் குறித்தும் தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பு குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபகாலமாக அடைந்து வந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெள்ளை பந்து கேப்டனாக பாபர் அசாமுக்குப் பிறகு முகமது ரிஸ்வான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உத்வேகத்தில் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் கேப்டன் ரிஸ்வான் 2023ஆம் ஆண்டு இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடிய போது இந்திய மக்கள் பாகிஸ்தான் அணியை எப்படி வரவேற்றார்கள் என்றும் அதேபோன்று பாகிஸ்தான் மக்களும் இந்திய அணி அடுத்த ஆண்டு விளையாட வரும் போது வரவேற்பார்கள் என்றும் சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட கேப்டன் பொறுப்பு மிகப்பெரிய பாக்கியமாக கருதுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் மக்கள் அன்பாக வரவேற்பார்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இந்தியாவுக்கு விளையாட சென்ற போது இந்திய மக்கள் எங்கள் மீது சிறந்த அன்பினை வெளிப்படுத்தினர். அதற்கு அனைவரும் சாட்சியாக இருந்தனர். அதேபோன்று பாகிஸ்தான் மக்களும் இந்திய அணியை இன்முகத்தோடு வரவேற்பார்கள். இருப்பினும் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்குபெறுமா என்பது கிரிக்கெட் வாரியத்திற்கு தெரியும். பாகிஸ்தான் அணியின் வைட்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

இதையும் படிங்க:51/7.. நாங்க கொத்தா விக்கெட் கொடுத்தா.. அது சரிவு கிடையாது.. ஏன்னா காரணம் இதான் – துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேச்சு

உலக அரங்கில் பாகிஸ்தானை பிரதிநிதிப்படுத்துவது மிகப்பெரிய கௌரவம். திறமையான பாகிஸ்தான் அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பாகும். புகழ்பெற்ற பாகிஸ்தான் கேப்டன்கள் வரிசையில் இணைவது கேக் மீது தடவப்பட்ட ஐஸ் போன்ற உணர்வாகும்.இந்த கதாபாத்திரத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.மேலும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்”என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -