51/7.. நாங்க கொத்தா விக்கெட் கொடுத்தா.. அது சரிவு கிடையாது.. ஏன்னா காரணம் இதான் – துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேச்சு

0
425
Abhishek

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பை இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் எதிர் கொண்டார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர், இந்திய அணி விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து தோற்பது குறித்தான கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் இரண்டு போட்டிகளை இழந்த இந்திய அணி

இந்தத் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த பொழுதும் இந்திய அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதை எடுத்து புனே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் வெறும் 156 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதன் காரணமாக 350 ரன்களை துரத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இந்திய அணி இரண்டாவது போட்டியையும் தோற்று டெஸ்ட் தொடரை இழந்தது. இந்திய அணி கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

இந்திய அணி கொத்தாக விக்கெட்டுகளை இழப்பது சரிவு கிடையாது

இது குறித்து பேசி இருக்கும் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “நீங்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழக்கும் போது அல்லது நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை எடுக்கும் போது நான் அதை சரிவு என்று அழைக்க மாட்டேன். நாங்கள் கடந்த ஆட்டத்தில் 51 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினோம். இந்த விளையாட்டில் இப்படி நடப்பது சகஜம்தான்”

இதையும் படிங்க : கேரி கிரிஸ்டன் அப்பாவி போல நடிக்கிறார்.. இத்தனை மோசமான விஷயத்தை செஞ்சிருக்கார் – பாக் பசித் அலி விமர்சனம்

“இது மனநிலை சார்ந்தது. நீங்கள் வெளியிலோ அல்லது உள்ளுக்குள் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் உணரப்படுவதால் இப்படி நடக்கிறது. இது உண்மையில் கவலை அளிக்கிறதா என்று கேட்டால், நாம் அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்று யோசிக்க வேண்டும். அதுதான் நம்முடைய செயல்முறை மற்றும் மனநிலை வழியாக செய்ய முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -