பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் முதலில் நடைபெற உள்ள ஒரு நாள் போட்டித் தொடருக்கான தேதி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்
சமீபத்தில் தொடர்ச்சியான தோல்விகளைக் கண்ட பாகிஸ்தான் அணி கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது பாகிஸ்தான் அணியின் ஒருநாள் தொடருக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்ட முகமது ரிஸ்வான் கேப்டனாக தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலக்கப்பட்ட பாபர் அசாம், அப்ரிடி மற்றும் நஷீம்சா ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
சமீபத்தில் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் அசத்திய இடதுகை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் பைசல் அக்ரம் மற்றும் ஆல் ரவுண்டர் அராபத் மின்ஹாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்த இருவரும் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஆவர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியிலும் தற்போது முன்னணி வீரர்கள் திரும்பவும் இடம்பெற்று இருக்கின்றனர்.
போட்டிகளை இந்தியாவில் எப்படி பார்ப்பது?
கம்மின்ஸ் கேப்டனாக தலைமை வகிக்கும் ஆஸ்திரேலியா அணி வலிமையான வீரர்களை கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடிய 108 ஒரு நாள் போட்டிகளில் 40 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த சோக வரலாற்றை மாற்ற முகமது ரிஸ்வான் அணி கண்டிப்பாக முயற்சி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் நவம்பர் 4, 8 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டித் தொடர் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் இணையதளத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த போட்டிகளைக் கண்டுகளிக்கலாம். இந்த இரண்டு அணிகளும் வலுவான வீரர்களை கொண்டிருப்பதால் இந்த போட்டித் தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.
இதையும் படிங்க:கேகேஆர் இப்படி செஞ்சதுக்கு அழுதுட்டேன்.. ஆனா நான் சமாதானம் ஆனதுக்கு இது மட்டும்தான் காரணம் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், ஆகா சல்மான், அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான் (wk), இர்பான் கான், கம்ரன் குலாம், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, சைம் அயூப் ஷஹீன் ஷா அப்ரிடி