கேகேஆர் இப்படி செஞ்சதுக்கு அழுதுட்டேன்.. ஆனா நான் சமாதானம் ஆனதுக்கு இது மட்டும்தான் காரணம் – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

0
1986

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் அணியில் தான் தக்க வைக்கப்படாதது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தக்கவைக்கப்படாத ஆல் ரவுண்டர்

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இதில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட, நடப்பு ஐபிஎல் சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரிங்கு சிங், சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, ரமன் தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோரை தக்க வைத்து பட்டியலை வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான வெங்கடேஷ் ஐயர் முக்கிய வீரராக திகழும் நிலையில் அணியில் தகுதிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஏலத்தில் கொல்கத்தா அணி இவரை மீண்டும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் தக்கவைக்கப்படாதது குறித்து ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த விஷயம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “கொல்கத்தா அணி ஒரு குடும்பம் போன்றது, இதில் நிறைய உணர்ச்சிகள் இருக்கின்றன. எனது பெயர் தக்கவைப்பு பட்டியலில் இல்லை என்பது எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் இந்த நிலைமை என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். இது எப்படி வேலை செய்கிறது என்பதும் தெரியும். 2022ஆம் ஆண்டில் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் நான் ஒருவராக இருந்தேன். அதை எப்படி தக்க வைத்துக் கொள்வது அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதும் தெரியும்.

இதையும் படிங்க:உங்க வித்தையை அஸ்வின்கிட்ட காட்டாதீங்க.. நேரம் பார்த்து அவர் இதை செஞ்சிருவாரு.. ஸ்டார் பேட்டரை எச்சரிக்கும் ஆகாஷ் சோப்ரா

எனவே தற்போது கொல்கத்தா அணியும் மிகச் சிறந்த வீரர்களைத் தக்கவித்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இருப்பினும் நான் கொல்கத்தா அணியில் இருக்க விரும்புகிறேன் மற்றும் எனக்கான வாய்ப்புகள் இருக்கும் என்றும் நம்புகிறேன். நான் ஒரு நல்ல ஏலத்தில் இருந்தால் நான் விரும்பும் அணிக்காக விளையாட முடியும். கொல்கத்தா அணி தற்போது நல்ல நிலையை கொண்டிருக்கிறது. அவர்கள் பேட்டிங்கில் 14 முதல் 16 ஓவர்கள் வரை நான் எளிதாக கடக்கும் நிலையில் இருக்கின்றனர். கொல்கத்தா ஒரு பெரிய தக்கவைப்பை கொண்டுள்ளது. நான் அதில் ஒருவனாக இருக்க விரும்பினேன். அணி எனக்காக நிறைய கொடுத்துள்ளது நானும் முடிந்ததை கொடுத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -