நம்ப முடியாத ரசிகர்கள்.. நட்சத்திர பாகிஸ்தான் வீரர் நீக்கம் .. ஆஸி க்கு எதிரான 3வது டெஸ்ட்க்கு அதிரடி முடிவு..!

0
259

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடக்கவுள்ளது. பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றியை பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இதனால் பாகிஸ்தான் அணி 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியா அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறது. கடைசியாக 1995-96 சுற்றுப்பயணத்தில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதன்பின் பாகிஸ்தான் அணி ஒருமுறை கூட வென்றதில்லை.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பாகிஸ்தான் அணி பெறுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது 3வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இமாம் உல் ஹக் மற்றும் ஷாகின் அப்ரிடி நீக்கப்பட்டு சயீம் அயூப் மற்றும் சாஜித் கான் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இமாம் உல் ஹக் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்காத நிலையில், அவருக்கு பதிலாக 21 வயதாகும் சயீம் அயூப் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் டி20 அணிக்கு தேர்வான சயீம் அயூப், முதல்தர போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை ஆடி வருகிறார். அதிரடியாக ரன்கள் சேர்க்கும் திறமையை கொண்ட அயூப், முதல்முறையாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனான ஷாகின் அப்ரிடிக்கு நீக்கப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் பவுலிங் அட்டாக்கின் தலைவனாக ஷாகின் அப்ரிடி செயல்பட்டு வந்தார். கடந்த 2 போட்டிகளிலும் சேர்த்து அதிக ஓவர்களை வீசியதும் அப்ரிடி தான். இதனால் ஷாகின் அப்ரிடி நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் புரியாமல் விவாதித்து வருகின்றனர்.

- Advertisement -

காயத்திற்கு பின் மீண்டு வந்த ஷாகின் அப்ரிடியின் பந்துவீச்சில் போதுமான வேகம் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு ஏற்றாற் போல் ஷாகின் அப்ரிடியும் 130 கிமீ வேகத்தை அவ்வப்போது தான் கடந்து வீசுகிறார். ஏற்கனவே நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் இருவரும் இல்லாத நிலையில், ஷாகின் அப்ரிடி வேகமாக வீசாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதால், அவர் நீக்கப்பட்டிருக்கலாம். அவருக்கு பதிலாக சாஜித் கான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளர்.

கடைசியாக பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சாஜித் கான் ஆடினார். அதன்பின் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கவுள்ளார். இதுகுறித்து பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே பேசும் போது, சிட்னி டெஸ்டில் ஷாகின் அப்ரிடி இல்லாமல் களமிறங்குவது மிகப்பெரிய முடிவு.

பாகிஸ்தான் அணியின் முன்னணி பவுலர்களாக ஷாகின் அப்ரிடி மற்றும் அப்ரார் அஹ்மத் இருவரையும் தான் நினைத்தேன். அவர்கள் இருவருமே இல்லாதது பாகிஸ்தான் அணியின் பலம் குறைந்ததாக தெரிகிறது. அதேபோல் சயீம் அயூப்பின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். அவரை பற்றி ஏற்கனவே சில சுவாரஸ்யமான விஷயங்களை கேள்விப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.