ஆசிய உலக கோப்பைக்கு மிரட்டும் அணியை வெளியிட்ட பாகிஸ்தான்.. முக்கிய வீரரை கழட்டி விட்டு அதிரடி!

0
493
Pakisthan

இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி 13வது உலகக்கோப்பை தொடர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துவங்கும் போட்டியின் மூலமாக ஆரம்பிக்கிறது. இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது!

இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் மிக முக்கிய அணிகளாக கணிக்கப்படும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணியும் இருக்கிறது. பல கிரிக்கெட் முன்னாள் வீரர்களின் அரை இறுதிக்கான நான்கு அணிகளில் பாகிஸ்தானும் ஒரு அணியாக இடம் பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்தியாவின் சூழ்நிலை பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒத்துப் போகக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். மேலும் இந்தியாவில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும். பாகிஸ்தான் அணியிடம் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் சுழற்பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். இந்த காரணத்தால் பாகிஸ்தான அணி இந்த உலகக் கோப்பை தொடரில் முக்கிய ஒரு அணியாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஆகஸ்ட் 22 முதல் 26 ஆம் தேதி வரையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த நாட்டில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இருக்கிறது. இதற்கு அடுத்து பாகிஸ்தானிலும் இலங்கையிலும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் ஆசிய கோப்பைத் தொடர் இருக்கிறது.

தற்பொழுது இந்த இரண்டு தொடர்களுக்கும் 18 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 18 பேர் கொண்ட அணியில் சவுத் ஷகீல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டுமே விளையாடுவார். மீதமுள்ள 17 பேர் கொண்ட அணி ஆசிய கோப்பையில் விளையாடும்.

- Advertisement -

இந்த அணி அறிவிப்பில் இரண்டு முக்கியமான விஷயங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு முதல் இடது கை ஷான் மசூத்தை மிடில் வரிசையில் முயற்சி செய்து வந்தது. இவர் டி20 கிரிக்கெட் வடிவத்திலும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

தற்பொழுது இவரை கழட்டிவிட்டு தயாப் தாஹிர் என்ற அதிரடி பேட்ஸ்மேனை சேர்த்து இருக்கிறது. இவர் வளரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அதிரடியான சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு முக்கிய விஷயமாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஃபாகிம் அஷ்ரப்பை கொண்டு வந்திருக்கிறது. இந்த 17 பேர் கொண்ட அணியில் இருந்துதான் உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணி உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசியக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி :

அப்துல்லா ஷபீக், ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, தயாப் தாஹிர், சவுத் ஷகீல் (ஆப்கானிஸ்தான் தொடருக்கு மட்டும்), முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான் (துணை-கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், ஃபஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி.