பாகிஸ்தான் பிஎஸ்எல் பரிசு தொகை.. இந்திய மகளிர் டி20 லீக் பரிசு தொகையை விட குறைவு.. முழு விவரங்கள்

0
521
WPL

பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 லீக் ஒன்பதாவது சீசன் நேற்று நடைபெற்று முடிவுக்கு வந்தது. நேற்றைய போட்டியில் சதாப் கானின் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், முகமது ரிஸ்வானின் முல்தான் சுல்தான அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த முகமது ரிஸ்வானின் முல்தான் சுல்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. உஸ்மான் கான் 57 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் இமாத் வாசிம் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் விறுவிறுப்பான போட்டியில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அந்த அணிக்காக துவக்க ஆட்டக்காரர் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 32 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்.

முகமது ரிஸ்வானின் முல்தான் சுல்தான் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழக்கிறது. அதே சமயத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி மூன்றாவது முறையாக பிஎஸ்எஎல் கோப்பையை வென்றது.

இந்திய டபிள்யுபிஎல் பெண்கள் கிரிக்கெட்

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு பாகிஸ்தான் மதிப்பில் 14 கோடி ரூபாய், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த முல்தான் சுல்தான் அணிக்கு 5.6 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதில் என்ன சுவாரசியமான விஷயம் என்றால், இது இந்தியாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முடிந்த பெண்கள் டி20 லீக்கில் வழங்கப்பட்ட பரிசு தொகையை விட மிகவும் குறைவு என்பதுதான்.

- Advertisement -

சாம்பியன் பட்டம் என்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு வழங்கப்பட்ட பாகிஸ்தான் மதிப்பிலான 14 கோடி ரூபாய் என்பது இந்திய மதிப்பில் 4.15 கோடி ஆகும். மேலும் தோல்வி அடைந்த முல்தான் சுல்தான் எனக்கு வழங்கப்பட்ட பாகிஸ்தான் மதிப்பில் 5.6 கோடி என்பது இந்திய மதிப்பில் 1.6 கோடி ரூபாய்தான்.

இதையும் படிங்க : பிஎஸ்எல் பைனல்.. 6 பந்துக்கு 8 ரன்.. ரிஸ்வான் அணிக்கு எதிராக சதாப் கான் அணி சாம்பியன் ஆனது எப்படி?

அதே சமயத்தில் இந்திய பெண்கள் டி20 கிரிக்கெட் லீக்கில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.