எவ்வளவு யோசிச்சாலும் பும்ராவை விட.. எங்க நசீம் ஷா தான் பெஸ்ட் பவுலர் – பாகிஸ்தான் இசானுல்லாஹ் பேட்டி

0
441
Bumrah

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசானுல்லாஹ் இந்திய வீரர் பும்ராவை விட தங்கள் நாட்டு நஷீம் ஷா சிறந்த பவுலர் எனக் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் இளம் வேகப்பந்துவீச்சாளரான இசானுல்லாஹ் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடியவர். பிஎஸ்எல் டி20 லீக்கில் அடையாளம் காணப்பட்ட இவர் சில போட்டிகளில் மட்டும் பாகிஸ்தான் அணிக்கு விளையாடி, தற்போது வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

பும்ரா பற்றிய கிரிக்கெட் உலகக் கணிப்பு

தற்பொழுது விராட் கோலி போல மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தன்னுடைய துறையான பந்துவீச்சில் சீரான செயல்பாட்டை கொண்டு இருக்க கூடிய ஒரே பந்துவீச்சாளராக பும்ரா மட்டுமே உலகக் கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். உதாரணத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் போன்றவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடினார்கள். அவர்களால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியவில்லை.

மேலும் பும்ரா தன்னுடைய பந்துவீச்சில் இருந்து ஆடுகளத்தை கழித்து விடும் திறமை கொண்டவர். ஆடுகளம் எப்படியாக இருந்தாலும் கூட தன்னுடைய யார்க்கர் மற்றும் வேக மாறுபாடுகளால் எந்த நிற பந்திலும் எந்த நாட்டு ஆடுகளத்திலும் எந்த பேட்ஸ்மேன் விக்கெட்டையும் கைப்பற்றக்கூடிய திறமை படைத்தவராக இருக்கிறார். தற்பொழுது இந்தத் திறமையுடன் உலகக் கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் கூட கிடையாது என்பது பலவீரர்களின் கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

நஷீம் ஷாதான் சிறந்தவர்

இந்த நிலையில் பாகிஸ்தான் வேகபந்துவீச்சாளர் இசானுல்லாஹ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி அளிக்கும் போது “பும்ரா மற்றும் நஷீம் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால், எப்படியும் நஷீம்தான் சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் “2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர் சிறப்பாகவே செயல்பட்டு இருந்தார். நடுவில் ஏதாவது ஒரு வருடம் அவர் சிறப்பாக இல்லாவிட்டால், அதனால் அவர் சிறந்த பந்துவீச்சாளர் இல்லை என்று ஆகிவிட முடியாது. எனவே எப்படி யோசித்தாலும் பும்ராவை விட நஷீம்தான் சிறந்த பந்துவீச்சாளர்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : கில்லுக்காக சர்பராஸ் கானுக்கு அநீதி செஞ்சிடாதிங்க.. அவரோட ஒரே பலவீனம் இதுதான் – பாக் பசித் அலி கருத்து

இசானுல்லாஹ் இப்படி கூறியிருக்கும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நஷீம் ஷா நீக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் சில நாட்கள் கழித்து பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் தரப்பில் அது நீக்கம் இல்லை ஓய்வு என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -