கில்லுக்காக சர்பராஸ் கானுக்கு அநீதி செஞ்சிடாதிங்க.. அவரோட ஒரே பலவீனம் இதுதான் – பாக் பசித் அலி கருத்து

0
499
Sarfaraz

இந்திய அணியில் சுப்மன் கில் காயம் அடைந்த குணமடைந்த பிறகு சர்பராஸ் கானுக்கு அநீதி செய்துவிடக் கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக நெருக்கடியான இருந்த நேரத்தில் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அரை சதம் அடித்து வெளியேறிய நிலையில், சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி 150 ரன்கள் எடுத்து, இந்திய அணியை போட்டிக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

சர்பராஸ் கானுக்கு காத்திருக்கும் பிரச்சனை

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பிறகு ஆஸ்திரேலியா சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்திய அணி நிர்வாகத்தின் மொத்த திட்டமும் ஆஸ்திரேலியா நோக்கியே அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் கில் காயமடைந்த காரணத்தினால் மட்டுமே சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேற்கொண்டு கில் வந்த பிறகு கேஎல்.ராகுல் வெளியே வைக்கப்படுவாரா? என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால் அவரை ஆஸ்திரேலியா தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா மிகவும் நம்புகிறார்.

- Advertisement -

சர்பராஸ் கானுக்கு அநீதி செய்யக்கூடாது

இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “கில் உடல் தகுதி பெற்று வந்தவுடன் சர்பராஸ் கானுக்கு அநீதி செய்யக்கூடாது. கேஎல்.ராகுலுக்கு இப்பொழுது ஓய்வு கொடுக்க வேண்டும்.அவரை மிக உயர்வாக மதிப்பிடுகிறார்கள். ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே சரியாக விளையாடினார், இந்தியாவில் இல்லை”

இதையும் படிங்க : 107 ரன்கள்.. 20 வருடங்களுக்கு முன்பு இந்திய அணி சாதித்த கதை.. ரோகித் கம்பீர் திரும்பசெய்வார்களா?

“சர்பராஸ் கானை பொறுத்தவரையில் அவர் டிரைவ் விளையாடும் போது மட்டுமே கொஞ்சம் பிரச்சனையாக இருக்கிறது. அவர் கட், புல், ஸ்கூப் என சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் அவர் டிரைவுகளில் நன்றாக இல்லை. நேற்று ஒப்பிடும் பொழுது இன்று சிறப்பாக இருந்தார். அவர் இன்று சிக்ஸர்கள் அடிக்க முயற்சி செய்யவில்லை. ரிஷப் பண்ட் இருக்கும் வரை அவர் பொறுமையாக இருக்கவே நினைத்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -