ஆசியக் கோப்பை 2 போட்டியிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப் பேசியுள்ள வீடியோ கிளிப் ஒன்று தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதட்டம் மிகப்பெரிய அளவில் இருந்த பொழுதும் இரு நாடுகளும் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் அதிகபட்சமாக மூன்று முறையில் குறைந்தபட்சமாக இரண்டு முறையும் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இந்தியா இருக்கிறது. இலங்கை அணி ஆறு முறை கோப்பையை வென்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி மொத்தமாக இரண்டு முறை மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் அணியில் பேட்டிங் யூனிட்டில் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியாக கழட்டி விடப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மூத்த வீரர்களாக ஷாகின் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுப் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மேலும் சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக ஹாரிஸ் ரவுப் இருக்கிறார். இவரால் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சராசரியாக தொடர்ந்து வீச முடிவது இந்திய அணிக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் ஒய்வுக்கு காரணம் இதுதான்.. தன்னை அறியாமல் வெளியிட்ட ரோகித் சர்மா – என்ன நடந்தது?
இந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரிடம் இந்திய அணியுடன் இரண்டு போட்டிகளில் மோத இருப்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுத்தினார்கள். அதற்கு அவர் ” இந்த முறை இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் நாமே வெல்வோம்” என்று ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்.