டெஸ்ட் கிரிக்கெட் ஒய்வுக்கு காரணம் இதுதான்.. தன்னை அறியாமல் வெளியிட்ட ரோகித் சர்மா – என்ன நடந்தது?

0
116
Rohit

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் உள்ள சிரமங்கள் குறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா அதில் தன்னை அறியாமல் தன் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுக்கான காரணத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா திடீரென ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் இதுவரையில் அவர் வெளிப்படையாக தன் ஓய்வுக்கான காரணம் குறித்து பேசவில்லை.

- Advertisement -

இதுதான் காரணம்

டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா கூறும் பொழுது “டெஸ்ட் கிரிக்கெட் உங்களிடம் இருந்து நீண்ட நேரத்தை கோரக் கூடியது. நீங்கள் தொடர்ந்து போட்டியில் ஐந்து நாட்கள் நீடிக்க வேண்டும். இது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சவாலானதாக இருக்கிறது”

” மும்பையில் கிளப் போட்டிகள் கூட இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும். நாங்கள் சிறுவயதிலேயே நீண்ட நேரம் கிரிக்கெட் விளையாடுவதற்கான மனநிலையை பெறுவதற்கு தேவையான விஷயங்களில் ஈடுபட்டே வளர்கிறோம். இது நீண்ட கால கிரிக்கெட்டை சமாளிக்கவும், சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கவும் உதவுகிறது”

- Advertisement -

தயாரிப்பை பற்றி புரியவில்லை

“இளம் வயதில் கிரிக்கெட் என்பது ரசித்து விளையாடுவது மட்டுமே. அப்போது போட்டிக்கு தயாராவது பற்றிய மதிப்பு தெரியவில்லை. பின் நாட்களில்தான் தயாராவதின் மதிப்பு மற்றும் அவசியம் என்ன என்பது குறித்து பெரிய ஆரம்பித்தது. அது மிகவும் கடினமான ஒரு வேலையாக இருந்தது”

இதையும் படிங்க : விராட் கோலி ரன்கள் குவிக்க, புஜாராவின் அந்த விஷயமே மிக முக்கிய காரணம் – ரவிச்சந்திரன் அஸ்வின் ஓபன் டாக்

” நீங்கள் முதலில் ஒரு போட்டிக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து தயாராக வேண்டும். இது அனைத்தும் முன் தயாரிப்பு பற்றியது. பிறகு நீங்கள் களத்தில் சென்று விளையாடுவது எதிர்வினை மட்டும்தான். அங்குள்ள பந்துக்கு மற்றும் சூழ்நிலைக்கு நீங்கள் எதிர்வினை ஆற்றுகிறீர்கள். உங்களால் களத்திற்கு சென்று தயாராகவே முடியாது. இந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நீண்ட தயாரிப்பு தேவை. இது உங்களை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடைய வைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -