டீசர்ட்டில் விராட் கோலியிடம் ஆட்டோகிராப் வாங்கிய பாகிஸ்தான் வீரர் – வீடியோ இணைப்பு!

0
79
Virat kohli

நேற்று 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய போட்டியான இந்தியா-பாகிஸ்தான் போட்டி வழக்கத்தை விட பெரிய பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கிரிக்கெட் எந்த அளவில் மாற்றங்களை சந்தித்திருந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு இருந்த வரவேற்பில் எந்த மாற்றமும் இல்லை. வரவேற்பு மென்மேலும் கூடித்தான் இருக்கிறது. அது நேற்றைய போட்டிக்கு வந்திருந்த ரசிகர்களை பார்க்கும்பொழுது தெளிவாகத் தெரிந்தது. அதே சமயத்தில் வீரர்கள் போராடிய விதமும் போட்டிகளில் இருந்து இந்தப் போட்டியை தனித்துக் காட்டியது!

இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று அரசியல் காரணங்களுக்காக தற்போது போட்டிகள் நடைபெறுவது இல்லை. ஆனால் ஐசிசி நடத்தும் போட்டிகளிலும் ஆசியா கவுன்சில் நடத்தும் போட்டிகளிலும் இருநாடுகளும் சந்தித்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே உறவென்பது எப்படி இருந்தாலும், சமூக வலைதளத்தில் அவர்கள் எப்படி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டாலும், இரு நாட்டு அணி வீரர்களும், மிக நாகரீகமான முறையில் தங்கள் நட்புகளை வெளிப்படுத்திய தோடு காலத்திலும் மிக நட்புணர்வோடு விளையாடினார்கள்.

இந்த போட்டி துவங்க படுவதற்கு முன்பே இரு நாட்டு வீரர்களும் பயிற்சியின்போது நட்பு ரீதியாக சந்தித்து நாகரீகமான உரையாடல்களை நிகழ்த்தி எதிர்காலத்திற்கான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார்கள். சமூக வலைதளங்களில் இது இரு நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து போட்டி முடிந்த பின்பும் வீரர்கள் பரஸ்பர அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் விராட் கோலி இடம் அவரது டீசர்ட்டில் அவரது கையெழுத்தை வாங்கி இருப்பது அழகானதொரு நிகழ்வாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே கடந்த டி20 உலகக்கோப்பை மோதலின்போது மகேந்திர சிங் தோனி இடம் டீசர்ட்டில் ஆட்டோகிராப் கேட்டு இருந்தார். ஆனால் அப்பொழுது தோனியால் தர முடியவில்லை. காரணம் அவர் சிஎஸ்கே அணி டீசர்ட்டில் கேட்டிருந்தார். அதற்குப்பிறகு ஆஸ்திரேலியாவில் இவர் இருந்தபொழுது தோனி அவருக்கு அதை அனுப்பி வைத்தார். தற்போது விராட் கோலியுடன் இந்திய அணி டீசர்ட்டில் கையெழுத்து வாங்கி இருக்கிறார். அந்த வீடியோ காண லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!