ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது பாகிஸ்தான்? பாகிஸ்தான் இல்லாமல் ஆசியக் கோப்பை நடக்க வாய்ப்பு இருக்கிறதா?

0
718
Asiacup2023

இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முதன்முறையாக முழுமையாக நடக்க இருக்கிறது!

இதற்கு முன்பு ஐந்து ஆசிய நாடுகள் பங்கு பெறும் ஆசியக்கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தில் நடைபெறுவதாக இருக்கிறது. இது நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு நல்ல பயிற்சியாக இருக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த முறை ஆசியக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கானது என்பதால், இந்திய அணி பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்வதை, இந்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை.

இதன் காரணமாக இந்த முறை ஆசியக் கோப்பை நடைபெறுமா? என்பதில் பெரிய இழு தற்பொழுது வரை நடந்து வருகிறது. இதற்கு மாற்றாக இந்திய தரப்பில் பொது இடத்தில் வைத்து நடத்தலாம் என்றும், பாகிஸ்தான் தரப்பில் இந்திய ஆட்டங்களை மட்டும் பொது இடத்தில் வைத்து நடத்தலாம் என்றும் யோசனைகள் சொல்லப்பட்டது.

தற்பொழுது இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பாகிஸ்தான் சொன்ன யோசனையை நிராகரித்து இந்தியாவின் பக்கம் நிற்பதாகத் தெரிகிறது. எனவே இதை அடுத்து பாகிஸ்தான் ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறினால் ஆசியகோப்பை இந்த முறை நடைபெறாது என்பது உறுதி. ஆனால் அதே சமயத்தில் மற்ற ஆசிய நாடுகள் சேர்ந்து இந்தக் காலக்கட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தவிருப்பதாகத் தெரிகிறது.

ஆனால் ஆசிய கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமத் தொகை தொடர்பாக பெரிய மாற்றங்கள் வரும். இதுகுறித்து பின்பு என்னவென்று முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த மாத இறுதியில் ஆசிய கிரிக்கெட் நாடுகளின் கூட்டம் அதிகாரப்பூர்வமாக நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு இந்த விவகாரத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்பது அப்பொழுதுதான் தெரியவரும்.