5 விக்கெட்டுகளை தூக்கி பயத்தை காட்டிய நியூசிலாந்து; தோல்வி அடையாமல் டிராவிற்கு போராடும் பாகிஸ்தான் அணி!

0
112

இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை நோக்கி செல்கிறது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 449 ரன்களும், பாகிஸ்தான் அணி 408 ரன்களும் அடித்தனர்.

- Advertisement -

41 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 277 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 318 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் முடிவில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

இந்நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அளித்த இமாம் உல் ஹக் 12 ரன்கள், பாபர் அசாம் 27 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க 80 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.

- Advertisement -

அப்போது ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது மற்றும் முதல் இன்னிங்சில் சதம் அடித்த சவுத் சக்கீல் இருவரும் விக்கெட் இழக்க விடாமல் சரிவிலிருந்து மீட்டு வருகின்றனர். இந்த ஜோடி உணவு இடைவேளைக்கு முன்பு வரை போராடி 45 ரன்களை ஆறாவது விக்கெட்டிற்கு சேர்த்திருக்கிறது. இதில் சர்ப்ராஸ் அகமது 29 ரன்களும் சவுத் சக்கீல் 16 ரன்களும் அடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற இன்னும் 194 ரன்கள் தேவைப்படுகிறது. ஐந்தாவது நாளில் இன்னும் 55 ஓவர்கள் மீதமிருக்க நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து விட்டால் அடுத்து வருபவர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்படுத்தும். பொறுத்திருந்து பார்ப்போம்.