தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் அணி அதிரடியான மாற்றங்கள் உடன் வெளியிட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் அணி மூன்று வடிவ தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் t20 தொடரில் தோல்வி அடைந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. இதைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
தென் ஆப்பிரிக்காவின் கனவு
தற்போது தென் ஆபிரிக்க அணி தங்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை வென்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட முடியும். எனவே முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் கனவில் தென் ஆப்பிரிக்க அணி இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாளை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே இந்த டெஸ்ட் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
பாகிஸ்தான் செய்த அதிரடி மாற்றம்
பாகிஸ்தானில் சாம்பியன் டிராபி நடைபெற இருப்பதாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்துவிட்டதாலும் ஷாகின் அப்ரிடி இந்த தொடரில் விளையாட விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக்கை முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இருந்து அதிரடியாக பாகிஸ்தான் நீக்கி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கேப்டன் ஷான் மசூத் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. மேலும் பாபர் அசாம் இடத்திற்கு வந்து இங்கிலாந்து அணி உடன் அபாரமாக சதம் அடித்த கம்ரன் குலாம் மூன்றாவது இடத்தில் விளையாடுவார். இதற்கு அடுத்து பாபர் அசாம் வருகிறார். அடுத்து சவுத் ஷகில் முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா என்று வருவதால் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியையும் பாகிஸ்தான் டிரா செய்தாலோ அல்லது வென்றாலோ இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவும்.
இதையும் படிங்க : ஷமி மீது நம்பிக்கை இல்லை என்று மெசேஜ் வந்திருக்கிறது.. ஆனால் விக்கெட் எடுக்கிறார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு
பாகிஸ்தான் பிளேயிங் XI: ஷான் மசூத் (கே), சைம் அயூப், கம்ரான் குலாம், பாபர் ஆசம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (வி. கீ), ஆகா சல்மான், நசீம் ஷா, குர்ரம் ஷாஜாத், நோமன் அலி மற்றும் மிர் ஹம்சா.






