ஷமி மீது நம்பிக்கை இல்லை என்று மெசேஜ் வந்திருக்கிறது.. ஆனால் விக்கெட் எடுக்கிறார் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
225
Shami

தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாட மாட்டார் என்று உறுதியாக இருப்பது இந்திய அணிக்கு ஒரு விதத்தில் நல்ல விஷயம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி இந்திய அணிக்கு வருவது குறித்தான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. இறுதியில் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று 100% நம்பப்பட்டது. ஆனால் இப்போது அவர் உள்நாட்டு கிரிக்கெட்டோடு நிறுத்தி வைக்கப்பட்டு விட்டார்.

- Advertisement -

மூன்று உள்நாட்டு தொடர்கள்

முகமது ஷமி தனது மாநில அணியான பெங்கால் அணிக்கு முதலில் சிவப்பு பந்தில் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார். இதற்கு அடுத்து டி20 வடிவத்தில் சையத் முஸ்டாக் அலி தொடரிலும் விளையாடினார். தற்போது பெங்கால் அணிக்காக ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரிலும் விளையாடுகிறார்.

இந்த நிலையில் நேஷனல் கிரிக்கெட் அகாடமி அவருக்கு உடல் தகுதி சான்றிதழ் கொடுக்கவில்லை. அவரது தேவை தொடர்ந்து இருப்பதால், அவர் சர்வதேச போட்டியை விளையாடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக அவர் தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

நம்பிக்கை இல்லை என்ற செய்தி வந்திருக்கிறது

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ஷமி ஆஸ்திரேலியா செல்லவில்லை என்பது தற்பொழுது உறுதியாக இருக்கிறது. இறுதியாக அவர் குறித்த ஒரு அப்டேட் என்சிஏவில் இருந்து வந்திருக்கிறது. ரோகித் சர்மாவும் அங்கிருந்து செய்தி வரவேண்டும் என்று சொல்லி இருந்தார். அங்குள்ள நபர்கள் ஷமியின் உடல் தகுதியை கண்காணித்து வருகிறார்கள். அவருடைய பணிச்சுமையை பார்த்து வருகிறார்கள். தற்போது அவர்கள் ஷமி மீது நம்பிக்கை இல்லை என்று மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : ஆஸி 4வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. பும்ராவுக்கு ஓய்வா.. 2 மாற்றங்கள் நடக்குமா?

“அவர் இப்பொழுது பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட மாட்டார். நாம் எதற்காக பெரிதாக வருத்தப்படவும் முடியாது. நாம் ஸ்கோர் கார்டை பார்த்தால் அவர் விக்கெட் எடுத்துக் கொண்டு வருகிறார். அதனால் அவர் நன்றாக இருக்கிறார் விளையாடுவார் என்று நினைத்தோம் ஆனால் நடக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -