ஐபிஎல் என்றாலே அது தோனி தான்….. அதற்கு என்ன காரணம் ? = பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா பாராட்டு!

0
3366

இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 29ஆம் தேதியுடன் முடிவடைந்தது கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் 74 போட்டிகளின் முடிவில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது .

இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின . முதலில் ஆடிய குஜராத் அணி 214 கரங்களை எடுத்தது . சென்னை அணி ஆடும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 15 ஓவர் களை கொண்டதாக குறைக்கப்பட்டது . இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் மட்டும் பவுண்டரி அடித்து சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் ரவீந்திர ஜடேஜா .

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் ஐந்தாவது சாம்பியன் பட்டம் இதுவாகும் . இதுவரை 14 சீசன்கள் ஆடி இருக்கும் சென்னை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறது . இதன் மூலம் மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது .

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் எம்.எஸ். தோனி . ஐபிஎல் தொடர்களில் இதுவரை பத்து முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது சென்னை அணி . கடந்த மூன்று வருடங்களிலும் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது .

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை அனைவரும் பாராட்டி வருகின்றனர் . இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமான ரமீஷ் ராஜா எம் எஸ் தோனி குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார் .

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் அவர் ” ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே அதில் அனைவருக்கும் நினைவு வருவது மஞ்சள் நிறமும் தோனியும் தான். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எவ்வளவு காலம் நடக்கிறதோ அவ்வளவு காலமும் தோனிக்காகவும் அவரது கேப்டன் பதவிக்காகவும் அது பேசப்படும் . ஐபிஎல் போட்டி என்றாலே அது தோனி மேனியா தான் என்று தெரிவித்திருக்கிறார் . அவரது அமைதியான அணுகுமுறை தலைமை பண்பு மற்றும் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் ஆகியவை என்றென்றும் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் என பாராட்டி இருக்கிறார் .