2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற 11 பாகிஸ்தான் வீரர்களின் சம்பளம்

0
1634
Pakistan Cricketers in IPL

2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் விளையாடினார்கள். அதில் குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 11 கிரிக்கெட் வீரர்கள் வந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படி ஐபிஎல் தொடரில் வந்து பங்கெடுத்து விளையாடிய பாகிஸ்தான் வீரர்களின் வருமானம் எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்.

- Advertisement -

சல்மான் பட் – 40.16 லட்சம்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஓபனிங் பேட்ஸ்மேன் சல்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 40 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கொல்கத்தா அணியில் இவர் மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடி 193 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாஹித் அப்ரிடி – 2.71 கோடி

Afridi in IPL 2008

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 2 கோடியே 71 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

சோய்ப் அக்தர் – 1.70 கோடி

பாகிஸ்தானை சேர்ந்த ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான இவரை 2008ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முகம்மது ஹபீஸ் – 40.16 லட்சம்

டாப் ஆர்டரில் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனான இவர் ஒரு சில சமயம் தனது அணிக்காக பந்து வீசுவார். ஆல்ரவுண்டர் என்கிற அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 40 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வரை ஏலம் எடுத்தது. இவரும் சல்மான் பட் ஆகிய இருவரும் ஒரே அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

உமர் குல் – 60 லட்சத்து 24 ஆயிரம்

Umar Gul in IPL 2008

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 60 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மிஸ்பா உல் ஹக் – 50.2 லட்சம்

மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் இவரை 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இடத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 50 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. எனினும் இவரை அனைத்து போட்டியிலும் பெங்களூரு அணி நிர்வாகம் விளையாட வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ரன் அக்மல் – 60 லட்சம்

பாகிஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவரை ராஜஸ்தான் அணி 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்களில் 60 ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அந்த ஆண்டு நடந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

யூனிஸ் கான் – 90.36 லட்சம்

2008ஆம் ஆண்டு காலகட்டங்களில் மிக சிறப்பாக பேட்டிங் விளையாடி வந்த இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 90 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. இருப்பினும் இவரை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் விளையாட வைத்தது. அந்த போட்டியிலும் இவர் 3 ரன்கள் மட்டுமே குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஹெல் டன்விர் – 40.16 லட்சம்

Sohail Tanvir IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 40 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். ராஜஸ்தான் அணி வெற்றி பெற இவரும் ஒரு முக்கிய காரணமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஒரு போட்டியில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும். பல தொடர்களாக இவர் வீசிய இந்த பந்து வீச்சு ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது ஆசிப் – 2.61கோடி

வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், டெல்லி அணியால் 2 கோடியே 61 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். டெல்லி அணிக்கு மொத்தமாக 8 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோயிப் மாலிக் – 2 கோடி

பாகிஸ்தானைச் சேர்ந்த மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இவரை டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டாப் ஆர்டரில் இறங்கி விளையாடுவதும் அதே சமயம் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் ஆப் ஸ்பின் பவுலிங் போட கூடிய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.