உலக கிரிக்கெட்

பேட்டிங் பண்ணது போதும் கிளம்புங்க.. அவுட் ஆகாமலே பாக் வீரர் இமாத் வாசிமுக்கு நடந்த அவமானம்.. இங்கிலாந்து 100 பந்து தொடர்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் வீரரான இமாத் வாசிம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போதே ட்ரெண்ட் ராக்கர்ஸ் அணி நிர்வாகத்தால் ரிட்டையர்டு ஹர்ட் செய்யப்பட்டார்.

- Advertisement -

ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் பர்மிங்கம் ஃபீனிக்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது இமாத் வாசிமுக்கு இந்த அவமானம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான 100 பந்துகள் கொண்ட போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 28வது ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட் மற்றும் பர்பிங்கம் பீனிக்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட் அணி நூறு பந்துகள் முடிவில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பேன்டோன் மற்றும் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அதற்குப் பிறகு இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் 2 ரன்களில் வெளியேற, ரோமன் போவல் ஒரு ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பிறகு அல்சோப்புடன் பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் முப்பதாவது பந்தில் இருந்து தனது ஆட்டத்தினை தொடர்ந்தார்.

- Advertisement -

மிக மெதுவாக விளையாடிய இமாத் வாசிம் 55 ஆவது பந்தில் இருந்து 60-வது பந்து வரை ஒரு ரன் கூட அடிக்காமல் வீணாக பந்துகளை டாட் செய்தார். ஆனால் அந்த ஐந்து பந்துகளுக்கு இடையே ஐந்து அகல பந்துகள் வீசியதால் மட்டுமே ட்ரண்ட் ராக்கெட்சின் ரன் வேகம் சற்று உயர்ந்தது. மேலும் தொடர்ந்து ஒரு ரன் மட்டுமே எடுத்து வந்த இமாத் வாசிம் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரிகள் மட்டுமே அடித்து 29 ரன்கள் குவித்தார்.

மிடில் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடாமல் மிக மெதுவான ஆட்டத்தை ஆடியதால் பொறுமை இழந்த ராக்கெட்ஸ் நிர்வாகம் இமாத் வாசிமை பேட்டிங் செய்யாமல் திரும்பி வர அழைத்தது. இது கிரிக்கெட்டில் சற்று அவமானகரமான செயலாக பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக கிரிஷ் கிரீன் உள்ளே அனுப்பப்பட்டார். அல் சோப் 37 பந்துகளில் 51 ரன்கள் குவித்ததால் ட்ரெண்ட் ராக்கெட் அணி 118 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க:ஐபிஎல் விளையாட வந்துட்டு.. எங்க நாட்டு உபசரிப்ப குறை சொல்லாதிங்க.. உண்மை இதுதான் – அஸ்வின் விமர்சனம்

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பர்மிங்காம் அணி 93 பந்துகளில் நான்கு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. 100 பந்துகள் தொடரில் பேட்டிங் செய்யாமல் பாதியிலேயே வெளியேறிய மூன்றாவது வீரர் இமாத் வாசிம் ஆனார். இவருக்கு முன்பாக ஷாம் பில்லிங்ஸ் மற்றும் வெயில் மேட்சன் ஆகியோர் இதேபோன்று ரிட்டயர்டு ஹட் ஆகியிருக்கின்றனர்.

- Advertisement -
Published by