இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் இவர் ஒருவருக்கு மட்டும் மாற்று வீரரே இல்லை.. அவர் திறமையே வேறு – சஞ்சு சாம்சன் பேச்சு

​மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதபோதிலும், இந்திய அணியில் திறமையான இளம்படை உருவாகி வருவதாக விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். போட்டியில் தோல்வியடைந்த போதிலும் இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 23 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரின் சமீபத்திய செயல்பாடுகள் அணியின் வேகப்பந்து வீச்சுக்குக் கூடுதல் பலம் சேர்த்து வருகின்றன.

​இப்போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சஞ்சு சாம்சன் பேசும்போது, “ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக யாரையும் கொண்டு வர முடியாது. அவர் தலைமுறைக்கு ஒருவர் வரும் வகையிலான பௌலர், அவர் நமது அணியில் இருப்பது நாம் செய்த அதிர்ஷ்டம். ஆனால் நம்மிடம் சிறந்த திறமையாளர்கள் உருவாகி வருகிறார்கள்; அர்ஷ்தீப் சிங் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், அதேபோல் பிரின்ஸ் யாதவ் கடந்த சில போட்டிகளில் பந்துவீசிய விதம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. நம்மிடம் நல்ல திறமைகள் இருப்பதாக உணர்கிறேன். அவர்களுக்கு அதிக போட்டிகளில் வாய்ப்பளித்து ஆதரவளித்தால் அவர்கள் மேலும் சிறப்பான பௌலர்களாக மாறுவார்கள்” என்று கூறினார்.

​மேலும் ஆட்டத்தின் திருப்புமுனை குறித்துக் கூறிய அவர், “திலக் வர்மா அவுட் ஆன தருணமே போட்டியின் திருப்புமுனை. நாங்கள் ஓவருக்கு 10 முதல் 12 ரன்கள் என நன்றாகச் சேஸ் செய்து கொண்டிருந்தோம். பிரஷர் சூழலில் ரெட்டியும் திலக்கும் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்கள். அந்த விக்கெட் விழும் வரை நாங்கள் வெற்றிப் பாதையில்தான் இருந்தோம். ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகும் இரண்டு இளம் கிரிக்கெட்டர்கள் வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் லைன் அப்பை எதிர்கொண்டு பிரஷரை கையாண்ட விதம் அருமையான விஷயம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

​தனது பேட்டிங் ஆட்டம் குறித்து தொடர்ந்து பேசிய அவர், “தோற்கும் அணியில் இருக்கும்போது நீங்கள் என்ன செய்தாலும் அது வித்தியாசமான உணர்வையே தரும், எனவே தற்போது எனக்குச் சற்று ஏமாற்றமாகவே உள்ளது. நான் வெற்றிபெறும் அணியில் இருக்கவே விரும்பினேன். அங்கே பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்தேன். இது போன்ற பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் இன்ஸ்டிங்க்ட்ஸ் மற்றும் பவர் கேமை நம்பி விளையாட வேண்டும், அதைத்தான் நான் செய்தேன். இந்த நாக் எனக்கு மகிழ்ச்சியளித்தாலும் வெற்றி அணியில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -
Published by

Recent Posts