ஐபிஎல் விளையாட வந்துட்டு.. எங்க நாட்டு உபசரிப்ப குறை சொல்லாதிங்க.. உண்மை இதுதான் – அஸ்வின் விமர்சனம்

0
263
Ashwin

அடுத்த ஆண்டு 2025-ல் ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், அது குறித்தான நிறைய எதிர்பார்ப்புகள் இப்பொழுதே எழுந்திருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஏலம் குறித்து பல விஷயங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் அலசி வருகிறார். அதில் ஒரு பகுதியாக வெளிநாட்டு வீரர்களை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

தற்போது உலகெங்கும் பெரிய மற்றும் சிறிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களின் தனிப்பட்ட டி20 லீக்குகளை நடத்திக் கொண்டு வருகின்றன. முதலில் இங்கிலாந்து இந்த வகையில் டி20 லீக்கை சொந்தமாக நடத்த ஆரம்பித்தது. அவர்கள்தான் இதற்கு முன்னோடியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் 2007 ஆம் ஆண்டு ஐசிசி முதல் டி20 உலக கோப்பை தொடரை நடத்தியதும், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அடுத்த ஆண்டு பிரம்மாண்டமான முறையில் ஐபிஎல் தொடரை ஆரம்பித்தது. அப்போது இருந்து இப்போது வரையில் 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் உலகின் முதல் நிலை டி20 லீக் தொடராக இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடருக்கு அருகில் எந்த ஒரு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 தொடரும் கிடையாது. இங்கு வீரர்களுக்கான சம்பளத்தில் ஆரம்பித்து, பயிற்சி வசதிகள், பாதுகாப்பு வசதிகள், தங்குமிடம் மற்றும் உணவு என எல்லாமே நட்சத்திர வசதியில் கொடுக்கப்படுகிறது. ஐசிசி தொடர்களை விட ஐபிஎல் தொடரில் தான் வீரர்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறார்கள். இப்படி இருந்தும் ஐபிஎல் அணி நிர்வாகங்களில் விருந்தோம்பலை வெளிநாட்டு வீரர்கள் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து கிரிக்கெட் அனலைசர் பிரசன்னாவுடன் உரையாடலில் ஈடுபட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நானும் வெளிநாடுகள் சென்று கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். அங்கு எப்படி விருந்தோம்பல் இருக்கும் என்று எனக்குத் தெரியும். உலக கிரிக்கெட்டில் ஐபிஎல் அணி நிர்வாகங்களில் விருந்தோம்பல் போல வேறு எங்குமே இருக்காது. முதலில் வெளிநாட்டு வீரர்கள் இதில் ஏதாவது குறை சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : எங்க ஸ்மித் உங்க விராட்.. 2 பேரும் கிடையாது.. இவர்தான் சச்சின் சாதனையை உடைப்பார் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் உரையாடலில் ஈடுபட்ட பிரசன்னா கூறும் பொழுது “நான் கிரிக்கெட் சம்பந்தமாக முழுக்க வெளிநாடுகளில்தான் வேலை செய்கிறேன். அங்கு நான் தங்கும் ஒரு ஹோட்டலில் தண்ணீர் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். அதே இந்தியாவில் நாம் சாப்பிடும் உணவில் ஏதாவது குறை என்றுஹோட்டல் நிர்வாகத்திடம் சொன்னால், அவர்கள் மன்னிப்பு கேட்பதோடு, உணவை மாற்றி கொடுத்து, அடுத்த மூன்று நாட்களுக்கு இலவச உணவு தருவதாக கேக் உடன் வந்து நிற்பார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவை யாருமே குறை சொல்லவே முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -