ஷாகின் அப்ரிடி மருத்துவத்திற்கு நாங்கள் எதுவும் செய்யவில்லையா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பதிலடி!

0
1023
Pakistan

22 வயதான இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பாக இருந்து வருகிறார். மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும், இந்தியாவில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு அடுத்து இவர்தான் குறிப்பிடும்படியாகச் செயல்பட்டு வருகிறார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்திருந்தது. அந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஃபீல்டிங் செய்கையில், முழங்காலில் காயம் அடைந்தார் ஷாகின் ஷா அப்ரிடி.

- Advertisement -

இந்தக் காயத்தால் இவரால் அடுத்து நெதர்லாந்து தொடருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட முடியாமல் போனது. காயம் இருந்தாலும் கேப்டன் பாபர் கேட்டுக்கொண்டதால் ஆசிய கோப்பை தொடரில் இவர் அணியோடு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது மாமாவான பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பிரபல முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது மருமகனின் காயத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த செலவையும் செய்யவில்லை. தான்தான் அவருக்கு லண்டனில் ஒரு மருத்துவரை அறிமுகம் செய்து வைத்தேன். அவரிடம் தான் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

ஷாகித் அப்ரிடி இப்படிக் கூறியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான பேச்சுகள் உருவானது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது வசை பாடினார்கள். விஷயம் பாகிஸ்தான் நாட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டத்தில் பெரிய அதிர்ச்சிகளை உருவாக்கியது.

- Advertisement -

தற்போது இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தனது விளக்கத்தை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஷாகின் அப்ரிடியை இப்படி நிராகரிக்கும் என்று யாராவது நினைக்கிறீர்களா? இது எனது புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இது ஒரு துரதிஷ்டவசமான சர்ச்சை. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையின் போது முகமது ரிஸ்வான் காயம் குணமாகி விளையாடுவதற்காக, எங்களின் மருத்துவக்குழு வெளியேறி அவருக்காக இரவு பகலாக உழைத்தது. வீரர்கள் எங்களின் மிக முக்கிய பங்குதாரர்கள். அவர்கள் தங்குமிடம் ஹோட்டல் இந்த விஷயத்தில் ஏதாவது அவர்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டிருக்கலாம். நாங்கள் நிச்சயமாக அவரைக் கைவிடவில்லை ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஷாகின் ஷா லண்டனில் தனது மறு வாழ்வில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் அவர் பங்கேற்பது உறுதியாகி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் காயம் மற்றும் மறு வாழ்வுக்காக எப்பொழுதும் ஓயாமல் உழைக்கும். வீரர்களை எந்த நேரத்திலும் கைவிடாது” என்று கூறியிருக்கிறார்!