இந்திய அணிக்கு எதிரா ஷாகின் அப்ரிடிய வேற மாதிரி ரெடி பண்றோம்.. 2021 திரும்ப போகுது – பாக் பயிற்சியாளர் பேட்டி

0
104
Shaheen

அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியை மீண்டும் சிறந்த முறையில் உருவாக்கிக் கொண்டு வருவதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் தெரிவித்திருக்கிறார்.

உலகக் கிரிக்கெட்டில் மிகவும் அச்சுறுத்தல் தரும் வேகப்பந்து வீச்சாளராக ஷாகின் அப்ரிடி உருவாகி வந்தார். ஆனால் 2023 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக அடி வாங்கியதில் இருந்து, அவருடைய பவுலிங் பார்ம் சரிந்து மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

2021 சம்பவம்

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி தந்த துவக்கம் மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது. அந்த போட்டியில் இருந்து அவர் மிகப்பெரிய கதாநாயகனாக பார்க்கப்பட்டார்.

மேலும் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்தை உள்ளே ஸ்விங் செய்வது, மேலும் சிறப்பான யார்க்கர்களை வீசுவது அவருடைய பலமாக இருந்து வந்தது. அவர் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவார். ஆனால் சில வருடங்களாக அவருடைய இந்த சிறப்பு திறன்கள் அத்தனையும் பாதிக்கப்பட்டு சாதாரணமாக மாறிவிட்டார்.

- Advertisement -

மீட்டுக் கொண்டு வருகிறோம்

இதுகுறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆஸ்லே நோஃப்கே கூறும் பொழுது “வேகம் அவரிடம் குறைந்துவிட்டது என்பதை அவர் அறிவார். மேலும் அவரது பார்மில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. வேகத்தை மீட்டெடுப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் சில பந்துகளை 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசினார். நுட்பம், மனநிலை மற்றும் ரிலீஸ் பாயிண்ட் ஆகியவை சிறப்பாக மாற வேண்டும். தற்பொழுது அவர் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. அவர் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீம்ல இவர் இருந்து இருக்கணும்.. இந்தியாவுக்கு எதிரா வேற வழி இல்ல இத பண்ணுங்க – வாசிம் அக்ரம் பேட்டி

“ஸ்விங் என்பது அன்றைய சூழ்நிலையால் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் அவர் முயற்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவர் உள்ளே வெளியே என்று எப்படி வேண்டுமானாலும் ஸ்விங் செய்யலாம். அதே சமயத்தில் அவர் வலது கை பேட்ஸ்மேனுக்கு பந்தை உள்ளே ஸ்விங் செய்தால் எவ்வளவு ஆபத்தானவராக இருப்பார் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -