பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவது குறித்து பேட்டி அளித்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறான செய்கைகள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி இடம் புகார் அளித்திருக்கிறது. இது குறித்தும் அவர் தன்னுடைய பேட்டியில் பேசியிருக்கிறார்.
என்னுடைய வேலை இது மட்டும்தான்
இதுகுறித்து மைக் ஹெசன் கூறும் பொழுது “நான் சொல்வது என்னவென்றால், நாங்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துகிறோம் அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். வீரர்கள் செய்தது குறித்த விஷயங்கள் எல்லாம் என்னை விட உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும். நான் கிரிக்கெட் பக்கத்தை மட்டுமே கையாளுகிறேன்”
“வீரர்களின் சிக்னல்களை பொருத்தவரை, ஒரு உயர் அழுத்த போட்டியில் இப்படியானவை எல்லாம் சாதாரணமாக நடைபெறக்கூடியது தானே. எங்களுடைய கவனம் ஒரு நல்ல விளையாட்டை விளையாடுவதில் இருக்கும். மேலும் என்னுடைய வேலையும் அதுதான்”
நாங்கள் இதை செய்யணும்
“டி20 கிரிக்கெட் வடிவத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியை வீழ்த்துவதற்கு நாங்கள் அந்த அணியை அழுத்தத்தில் வைத்திருக்கும் அளவுக்கு திறமையாக இருக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு அந்த அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அதுதான் சவாலானதாக இருக்கும்”
இதையும் படிங்க : இந்திய அணியின் ஆராவை உடைங்க.. 20 ஓவர் அவங்க முழுசா ஆட மாட்டாங்க.. இதை செய்யுங்க – அக்தர் அறிவுரை
“நாங்கள் முதல் போட்டியில் இந்திய அணி இடம் சாதாரணமாக தோல்வி அடைந்து விட்டோம். ஆனால் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பாக திரும்பி வந்து விளையாடினோம். ஆனால் அபிஷேக் சர்மாவின் விதிவிலக்கான இன்னிங்ஸ் எங்களை தோல்வியடைய வைத்து விட்டது. நாங்கள் மீண்டும் அதேபோல திரும்பி வந்து இந்திய அணியை வீழ்த்துவோம்” என்று கூறியிருக்கிறார்.






