இந்திய அணியின் ஆராவை உடைங்க.. 20 ஓவர் அவங்க முழுசா ஆட மாட்டாங்க.. இதை செய்யுங்க – அக்தர் அறிவுரை

0
634
Akthar

நடப்பு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நல்ல மனநிலையுடன் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்க வேண்டும் என சோயப் அக்தர் கூறியிருக்கிறார்.

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இரண்டாவது சுற்றில் இரண்டு வெற்றிகள் உடன் இந்திய அணிக்கு அடுத்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இரு அடிகளும் வருகின்ற ஞாயிறு இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றனரா

- Advertisement -

ஆராவை உடைங்க

இந்த தொடரில் முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடி படுதோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைப்பதற்கு அபிஷேக் சர்மாவின் அதிரடி மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எனவே இறுதிப் போட்டியில் வென்று பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விரும்புகிறது.

இதுகுறித்து சோயப் அக்தர் கூறும் பொழுது ” நீங்கள் மோசமான மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும். இந்திய அணியின் ஆராவை ஒதுக்கி வைக்க வேண்டும். அதை நீங்கள் உடைக்க வேண்டும். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் உங்களுக்கு இருந்த அதே மனநிலையுடன் விளையாடுங்கள். இந்த மனநிலை தான் உங்களுக்கு தேவையானது. நீங்கள் 20 ஓவர்கள் வீச வேண்டிய தேவை கிடையாது. விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதுமானது”

- Advertisement -

எங்கள் காலத்தில் நடந்தது

“என்னுடைய வார்த்தைகளை கவனியுங்கள். அபிஷேக் சர்மாவை முதல் இரண்டு ஓவர்களில் அவுட் செய்து விட்டால் அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் அபிஷேக் உங்களை விட மாட்டார். இதைத் தாண்டி நீங்கள் அவரை ஆட்டம் இழக்க வைக்க வேண்டும். நீங்கள் இதை செய்து விட்டால் இந்திய அணி ரன்னுக்காக தடுமாறும்”

இதையும் படிங்க : 2 தோல்வியை மறந்துடுங்க.. இந்திய அணியை எப்படி வீழ்த்தனும்னு எங்களுக்கு தெரியும் – பாக் கேப்டன் பேட்டி

“எனக்கு கம்பீர் பற்றி நன்றாக தெரியும். அவர் தனது அணியிடம் பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறுவார். பாகிஸ்தான் மோசமான கிரிக்கெட்டை விளையாட மோசமான அணியை தேர்வு செய்வார்கள். ஆனால் அவர்கள் இறுதிப் போட்டியை அடைந்து விட்டால் வென்று விடுவார்கள். இது என்னுடைய காலத்திலும் நடந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -