ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி இருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு ஜிம்பாபேவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என வென்றது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.
பரிதாபமாக சுருண்ட ஜிம்பாப்வே
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டிக்கான டாஸில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. அந்த அணி 37 ரன்கள் வரையில் விக்கெட் ஏதும் இழக்காமல் சிறப்பான முறையில் விளையாடி ரன்கள் சேர்த்து வந்தது. எனவே இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் இருந்த ஜிம்பாப்வே அணி 57 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நடுவில் 20 ரன்களில் பரிதாபமாக பத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 12.4 ஓவரில் 57 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முக்கீம் 5, அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பாகிஸ்தான் 10 விக்கெட் வெற்றி
இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 5.3 ஓவரில் விக்கெட் இழப்பில்லாமல் 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் சயும் அயுப் 18 பந்தில் 36 ரன்கள், ஓமர் யூசுப் 15 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : அரை சதம் அடிச்சாருதான்.. ஆனால் 2வது டெஸ்டில் இவர் வேண்டாம்.. அந்த பையன் வேணும் – ஹர்பஜன் சிங் கருத்து
இதைத்தொடர்ந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது தொடரை கைப்பற்றி இருக்கிறது. மேலும் இந்த டி20 தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி என யாரும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






