ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ஒரு முன்னணி வீரரை விளையாட வைப்பதை விட துருவ் ஜுரலை விளையாட வைக்க வேண்டும் என ஹர்பஜன்சிங் அதிரடியான கருத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணி வருகின்ற வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. மேலும் இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக பிங்க் நிற பந்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு திரும்பும் வீரர்கள்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை பும்ரா கேப்டனாக அணியை வழிநடத்தினார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பி அணியை வழிநடத்த இருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் இளம் வீரர் பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக விளையாடும் சுப்மன் கில் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து வெளியில் வந்து விட்டார். மேலும் ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் வெளியேறி இருந்தார். ஆனால் இவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட கூடாது என ஹர்பஜன்சிங் கூறியிருக்கிறார்.
இவர் வேண்டாம் இவரே இருக்கட்டும்
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது “துவக்க இடத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி தொடர வேண்டும் என்று நான் கூறுவேன். ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும் விளையாட வேண்டும். மற்ற இடங்களில் முதல் போட்டியில் விளையாடியவர்கள் அப்படியே இருக்கட்டும்”
இதையும் படிங்க : 36 ரன்னுக்கு திரும்ப.. இந்தியாவை ஆல் அவுட் பண்ற ஐடியா இல்ல.. இதைத்தான் செய்வோம் – அலெக்ஸ் கேரி எச்சரிக்கை
“கில் தற்பொழுது காயம் குணமடைந்து விட்டார். அவரை இரண்டாவது போட்டியில் விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர் மேல் வரிசையில் விளையாடியவர், அவரை கீழ் வரிசையில் ஜுரல் இடத்திற்கு கொண்டு வருவதால் பயனில்லை. இதனால் அவர் காத்திருப்பது சரியானது. ஜுரலுக்கு ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்து உடனே வெளியில் வைக்க கூடாது. அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






