உலக கிரிக்கெட்

மனசு முழுக்க வலி.. இந்திய அணியை தோற்கடிக்க காரணம் இதுதான்.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் யூனிஸ் கான் பேட்டி

தற்போது நடைபெற்று வரும் உலக லெஜென்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி இந்தியா சாம்பியன்ஸ் அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது.

- Advertisement -

இந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கான் வெற்றி குறித்து கூறிய காரணம் சற்று வினோதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகின் ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்குபெறும் இந்த ஆண்டுக்கான லெஜன்ட் கிரிக்கெட் லீக் தொடரில் எட்டாவது போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் கம்ரான் அக்மல் அதிரடியாக விளையாடி 77 ரன்களும், சோயப் மசூத் 51 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் குறைந்த பந்துகளில் அதிரடியாக விளையாட பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 40 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் வெளியேற, இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆறு அணிகள் கொண்ட புள்ளி பட்டியலில் தற்போது பாகிஸ்தான் அணி முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்த வெற்றி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் யூனிஸ்கான் கூறும் பொழுது “தற்போது நடந்து முடிந்த 2024 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி வெளியேறிய விதம் எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது. இதனால் இந்தத் தொடரில் நாங்கள் இந்தியா சாம்பியன்ஸ் அணியை தோற்கடித்து எங்கள் ரசிகர்களின் மகிழ்ச்சியில் புன்னகையை வரவழைக்க விரும்பினோம். அது தற்போது நடந்துள்ளது” என்று கூறியிருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டு சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. மேலும் இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா நிர்ணயித்த குறைந்த ரன்கள் இலக்கை கூட பாகிஸ்தான் அணி எட்ட முடியாமல் தோல்வி அடைந்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க:ருதுராஜ் அபிஷேக்க.. அந்த காரணத்துக்காகவே பாராட்டறேன்.. சின்ன பசங்கதான் சரி ஆயிடுவோம் – சுப்மன் கில் பேட்டி

மேலும் கத்துக்குட்டி அமெரிக்க அணியிடமும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து வெளியேறியதால் தற்போது கடும் விமர்சனங்களை சந்தித்து வருவதால் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வெற்றி அவசியமான ஒன்று என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் தற்போது கூறி இருக்கிறார். நடப்பு டி20 தொடரில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருப்பதும் பாகிஸ்தான் வாரியத்தின் கவனத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by