இந்திய கிரிக்கெட்

இந்தியா கூட தோத்தது பரவால்ல.. அடுத்த மேட்ச் ஜெயிச்சா வேற மாதிரி ஆயிடுவோம் – பாக் கேப்டன் சல்மான் பேச்சு

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெறுவது உறுதியானது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியில் மீண்டும் ஒரு தலைப்பட்சமாக இந்தியாவின் பக்கமே முடிந்திருக்கிறது.

போட்டியே இல்லாத போட்டி

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யாமல் இந்திய அணிக்கு கொடுத்தது மிக சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா இஷான் கிஷான் 40 பந்துகளில் 77 ரன்கள் அதிரடியாக எடுக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பவுலர்கள் அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார்கள். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பாகிஸ்தான் இந்திய அணிக்கு கொஞ்சமாவது போட்டி தரும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்தியா இந்த போட்டியை எந்த சிரமமும் இல்லாமல் வென்றிருக்கிறது.

- Advertisement -

அடுத்த சுற்றில் மாறிவிடும்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள சல்மான் அலி ஆகா “எங்களுடைய ஸ்பின்னர் களுக்கு இன்றைய நாள் சரியாக அமையவில்லை. அவர்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் கொஞ்சம் பின் தங்கி விட்டார்கள். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர்கள் சிறப்பாக இருந்து வருகிறார்கள். நாங்கள் அவர்களை நம்புகிறோம். இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. ஆனால் நாங்கள் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை”

இதையும் படிங்க : என் பக்கமா பாகிஸ்தானை ஓட வைக்க பிளான் போட்டேன்.. கடைசியா இப்படி செஞ்சு முடிச்சேன் – இஷான் கிஷான் பேட்டி

“இப்படியான போட்டிகளில் உணர்ச்சிகள் மிகவும் அதிகமாக இருக்கும். அதை நாம் சமாளிக்க வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த போட்டி நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியை வென்று சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். அடுத்த சுற்றில் இந்த போட்டி வேறு மாதிரியாக ஆகிவிடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts