என் பக்கமா பாகிஸ்தானை ஓட வைக்க பிளான் போட்டேன்.. கடைசியா இப்படி செஞ்சு முடிச்சேன் – இஷான் கிஷான் பேட்டி

0
22
Ishan

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்த இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 114 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 61 உடன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆடுகளம் சாதகம் இல்லை

இந்த போட்டியின் முதல் ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்த போதும் இன்னொரு முனையில் இஷான் கிஷான் அவரைவிட அதிரடியாக விளையாடினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக முதலில் அவருடைய பேட்டிங் அமைந்திருந்தது.

இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது “இன்றைய ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன். நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து விளையாடினால் போதும். பாகிஸ்தான் அணியை என் பக்கமாக ஓட வைக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் நான் ஆக்சைடு விளையாடுவதற்கு மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறேன். அதே சமயத்தில் எளிமையாக விளையாடவே முயற்சி செய்தேன்”

- Advertisement -

இவ்வளவு ரன் போதும்

“இந்த ஆடுகளத்தில் 160 முதல் 170 ரன்கள் எடுத்தால் போதும் என்று எனக்கு தோன்றியது. இந்தியா பாகிஸ்தான் போட்டி எங்களுக்கு மட்டுமல்ல மொத்த நாட்டுக்கு மேல் சிறப்பான ஒரு விஷயம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த வெற்றி எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். இதே வேகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல முயற்சி செய்வோம்”

இதையும் படிங்க : 175 ரன்.. கம்பீர் சாதனையை அவர் கண் முன்னால் உடைத்த இஷான் கிஷான்.. இந்தியா ரன் குவிப்பு

“பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி பந்து வீசும் போது பெரிய அளவுக்கு அவருக்கு ஆடுகளத்தில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தெரிந்தது. இப்படிப்பட்ட ஆடுகளத்தில் ஹர்திக் மற்றும் பும்ரா இருவரும் பந்து வீசிய விதம் மிகவும் அபாரமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -