இந்திய அணிக்கு எதிரா.. இதை செய்ய நினைத்தோம்.. ஆனா கோலி கேமையே மாத்திட்டாரு – பாக் கேப்டன் வருத்தம்

0
2004

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் முகமது ரிஸ்வான் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி தோல்வி

ஏற்கனவே பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலாவது போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்திய அணியை நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் இமாம் உல் ஹக் 26 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். பாபர் அசாம் 23 ரன்னில் வெளியேற, சவுத் சகில் மற்றும் ரிஸ்வான் கூட்டணி ஓரளவு பாகிஸ்தான் அணியின் ரன்களை உயர்த்தியது.

சகீல் 62 ரன் மற்றும் ரிஸ்வான் 46 ரன்னில் ஆட்டம் இழக்க, குஷ்தில் 38 ரன்னில் நடையை கட்டினார். இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அபாரமான சதத்தின் உதவியோடு 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தோல்விக்கான முக்கிய காரணம்

இந்த போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து முகமது ரிஸ்வான் கூறும் போது ” நாங்கள் இந்த போட்டியின் மூலமாக டாஸ் வென்றோம், ஆனால் டாஸ் வென்றாலும் அதன் பலன் கிடைக்கவில்லை. இந்த மைதானத்தில் 280 நல்ல ஸ்கோர் என்று நினைத்தோம். ஆனால் மிடில் ஓவர்களில் அவர்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களது விக்கட்டுகளை வீழ்த்தினர். நானும் சவுகத் சகீலும் இன்னிங்சை கட்டமைக்க விரும்பியதால் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு தவறான மற்றும் மோசமான ஷார்ட் தேர்வால் ஆட்டம் இழந்தோம். அதன் பிறகு நாங்கள் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டோம். 240 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. நீங்கள் தோற்கும்போதெல்லாம் எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செயல்படவில்லை என்று அர்த்தமாகும்.

இதையும் படிங்க:விமர்சனம் குறித்து கவலை இல்லை.. இந்திய அணியில் என் வேலை இது மட்டும்தான் – விராட் கோலி பேட்டி

இந்திய அணி பேட்டிங் செய்தபோது நாங்கள் ஆரம்பத்தில் அவர்களை அழுத்தத்திற்குள் உள்ளாக்கினோம். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் சிறப்பான பேட்டிங் மூலமாக எங்களை அழுத்தத்திற்கு தள்ளினார்கள். விராட் கோலி மற்றும் கில் ஆகியோர் இந்த போட்டியை எங்களிடம் இருந்து வெகு தூரம் கொண்டு சென்று விட்டார்கள். நான் எங்கள் பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும். இந்தப் போட்டியிலும் கடந்த போட்டியிலும் நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம். இருப்பினும் அடுத்த போட்டியில் அதை சமாளிக்க முடியும் என்ற நம்புகிறோம் என பேசி இருக்கிறார்.

- Advertisement -